பின் தொடர்பவர்கள்

பணி செய்வதற்கே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணி செய்வதற்கே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

0267 பதவி என்பது, பணி செய்வதற்கே

பதவி என்பது, பணி செய்வதற்கே

அன்பர்களே பதவி என்பது பணி செய்வதற்கு, அதுவும் கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் அன்பு பணி செய்வதற்கு பதவி என்று அர்த்தமாகின்றது. உங்களில் ஒருவன் தலைவனாக முற்பட்டால், இடையில் கச்சையை கட்டிக்கொண்டு பணிவிடை செய்யட்டும் என்று பணிக்கு பணிவான வரைவிலக்கணம் கொடுத்தார் இயேசு. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன? பதவி அதனால் வரும் அதிகாரம், அதைப்பின் தொடரும் மமதை, கர்வம் கூடவே கொள்ளையடிக்கும் எண்ணம் இவைகள் தான் பணிகளாக நாம் பார்க்கின்றோம். ஆன்மீக பணி செய்வோர் கூட, அன்புப்பணி எல்லோருக்கும் பொதுவானது என்பதை மறந்து, தங்களையே சதாசுற்றிவரும் கூட்டத்தோடு மட்டும் நிற்கும் ஆன்மீக பணியாளரை நாம் சர்வ சாதாரணமாக எங்கும் பார்க்கலாம், பணி என்பதை எடுத்துக்காட்ட ஒரு எளிய உதாரணம் இது! அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த நேரம். ஒரு நாள் அமெரிக்க அரசுத்தலைவர், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள், சாதாரண உடையணிந்து, தன் குதிரையில் ஏறிச்சென்றார். போகும் வழியில், ஒரு தளபதியின் குதிரைவண்டி சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று கொண்டிருந்தனர். தளபதியோ அருகில் நின்று அவர்களுக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வாஷிங்டன் அவர்கள், தளபதியிடம், "ஏன் நீங்களும் இறங்கி உதவி செய்தால் வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன் அவர்கள், குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சி செய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர் தளபதியிடம் "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் அரசுத்தலைவரைக் கூப்பிடுங்கள்... நான் வந்து உதவி செய்கிறேன்" என்று சொல்லி, தளபதியின் கையைக் குலுக்கினார். அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.
"பதவி என்பது, பணி செய்வதற்கே" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைத் தலைவராகப் பொறுப்பேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார் அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...