புதுப்பணக்காரன்
அன்பர்களே நம்மில் ஒரு சிலபேர் பணம் வந்தவுடன், தமது பழைய நிலமைகளை மறந்து வாழ்வா ர்கள். மற்றவர்களை மதிக்கமாட் டார்கள், தான் மற்ற எல்லோரையும் விட, உயர்ந்தவன் என்ற மமதை யில் வாழ்வா ர்கள், இவர்கள் தம் வாழும் இறுதிக்காலங்களில் தாழ் நிலை அடைந்து மிக பரிதாபத்து க்குரிய மனிதர்களாக மரித்து ப்போவார்கள், இவர்க ளைப்பற்றி மிக தத்துரூபமாக விளக்கும் ஒரு கதை உங்களுக்காக மலர்கின்றது. அது ஒரு மீன் பிடிக்கிராமம். அந்த கிராமத்திலே அடைக்கலம் என்ற ஒரு மீனவன் வாழ்ந்துவந்தார். கடவுளின் கிருபை யால் அவர் மீன் பிடியில் செல்வந்தராகிவிட்டார். அவர் செல்வந்தர் ஆனதும், அவரது போக்கிலே பல மாறுதல்கள் ஏற்பட்டன, எல்லோரும் அவரை புதுப்பணக்காரன் என்று அழைக்கத்தொடங்கினார்கள். யாரை யும் மதிக்கமாட்டார். பணம் சேர்ப்பதிலும், பாகட்டாய் வாழ்வதிலும் காலத்தை கழித்தார். ஒருமுறை அவரது வீட்டில் ஒரு எலி, அடைக்கலம் சம்மாட்டியாரின் வைரமோதிரத்தை விழுங்கிவிட்டது. அந்த எலியை பிடித்து வைரமோதிரத்தை எடுக்கவேண்டும் என்று எண்ணிய அடைக்கலம் சம்மாட்டியார், அவ்வூரில் துப்பாக்கிவைத்திருந்த ஒருவ னிடம் எலியை கொல்லும் வேலையை பொறுப்பு கொடுத்தார். அவனும் சில எலிகள் மீது குறிவைத்து சுட்டான். அதனால் பயன் ஏதும் இல்லை. எல்லா எலிகளும் ஒன்று சேர்ந்து, அங்கும் இங்குமாக ஓட்டம் காட்டின. கடைசியில் ஒருமாதிரி, அந்த வைரமோதிரம் விழுங்கிய எலியை சரி யாக குறிவைத்து சுட்டு விழுத்தினான். ஆனந்தப்பட்ட அடைக்கலம் சம்மாட்டியார், அவனிடம் எப்படியப்பா இவ்வளவு ஏராளமான எலிக ளுக்கு மத்தியில் இந்த ஒரே ஒரு எலியை சரியாக குறி வைத்து சுட்டாய்? என்று கேட்டார். புதுப்பணக்காரன் அடைக்கலம் சம்மாட்டியாருக்கு சரியான பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய அந்த துப்பாக்கி மனிதன், அது பெரிய விடையமே இல்லை, வைர மோதிரம் விழுங்கிய எலி, தான் மற்ற எல்லா எலிகளைவிட பெறும தியான எலி என்று தன்னை உணர்ந்து தலைக்கணத்தால் மற்ற எலி களை மதிக்காமல், அவர்களுடன் சேர்ந்து இருக்காமல், தனித்தே ஓட்டம் காட்டியதால், என்னால் மிக எளிதாக குறிவைத்து சுட முடிந்தது என்று சொன்னான்.அவனது பேச்சைக்கேட்டதும், புதுப்பணக்காரனாகிய அடைக்கலம் சம்மாட்டியார் சிந்திக்கத்தொடங்கினார்.
யாவும் கற்பனையே அன்புடன் பேசாலைதாஸ்.