பின் தொடர்பவர்கள்

0255 கத்தியை நீட்டாதே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0255 கத்தியை நீட்டாதே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 செப்டம்பர், 2015

0255 கத்தியை நீட்டாதே! உந்தன் புத்தியை தீட்டு

கத்தியை நீட்டாதே! உந்தன் புத்தியை தீட்டு


அன்பர்களே நாம் யார் என் பதை தெளிவாக சொல்வது, நம்மை அறியாமால் நாம் செய்யும் செயல்கள் என்பது என் வாதம். அதாவது நமக் குள் உறைந்து போயுள்ள அடிப்படை பிறவிக்குணம்! கொடுக்கும் குணம் படைத்தவன், யார் தடுத்தாலும் கொடுத் துக்கொண்டே இருப்பான்! இயேசுவுக்கு பிடித்த நல்ல சீடன், இராயப்பர். அவர் ஒரு கோழை, படிப்பறிவில்லாதவர். இருந்த போதும் அவரைத்தான் இயேசு தன் தலைமை தளபதியாக நியமித்தார். ஏன் அப்படிச்செய்தார்? இராயப்பர் இயேசுவுக்காக எதையும் ஆராயாமல் உடனே செய்துவிடுவார்.    கடலில் இறங்கி நடந்து வா என்றார் இயேசு, இராயப்பார் எதனையும் ஆராயமல் உடனே கடலில் இறங்கினார் நடந்தார் பின்னர் கடலில் மூழ்கப்பார்த்தார். நமக்குள் இருக்கும், நாம் அறியாமல் நமக்குள் இருக்கும் பிறவிக்குனமே நம்மை யார் என்று அடையாளப்படுத்தும். நான் சொல்ல வருவதை மிக எளிதாக சொல்லும் ஒரு சம்பவம் இது.

அந்த ஆசிரமத்தில் இருந்த ஓர் அன்னையின் முன்பாக ஓர் இளம் துறவி நின்று, அன்னையே, நான் ஓர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன், என்னை ஆசிர்வதியுங்கள் என்று பணிவோடு வேண்டினார். அந்த அன்னை இதைக் காதில் வாங்கியதாகவேத் தெரியவில்லை. ஆனால் அந்த இளம் துறவியிடம், மகனே, எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேண்டும். பக்கத்தில் இருக்கின்ற அந்த அறைக்குச் செல். அங்கே அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு கத்தி இருக்கிறது. அதை எடுத்து வந்து என்னிடம் கொடு என்றார். அந்தத் துறவியும் அக்கத்தியை எடுத்துவந்து கொடுத்தார். அதை வாங்கிய அந்த அன்னை, மகனே, உனது பயணம் நல்லபடியாக அமையும், போய் வா என்று துறவியின் தலையில் தனது கையை வைத்து ஆசிர் வழங்கினார். அப்போது அந்த இளம் துறவி, அம்மா, இந்தக் கத்திக்கும், உங்கள் ஆசிருக்கும் என்ன தொடர்பு, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கேட்டார். அதற்கு அன்னை, மகனே, நீ இந்தக் கத்தியை என்னிடம் கொடுத்தபோது கூரான பகுதியை உன் பக்கம் இருக்கிற மாதிரி பிடித்துக் கொண்டு, கைப்பிடி இருக்கிற ஆபத்தில்லாத பகுதியை என் பக்கம் நீட்டிக் கொடுத்தாய். அதனால் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் அதனால் ஏற்படும் தீமைகளை நீ ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு நன்மையே செய்வாய் எனப் புரிந்து கொண்டேன் என்றார். அதற்கு அந்த இளம் துறவி, அம்மா, இதையெல்லாம் நான் சிந்தித்துச் செய்யவில்லையே என்றார். ஆமாம். உன்னை அறியாமலே பிறருக்கு நன்மை செய்கிற இயல்பான குணம் உன்னிடம் உள்ளது. உனக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், சென்று வா மகனே என வழியனுப்பி வைத்தார் அன்னை. ஆன்மீகப் பயணமும் அங்கே ஆரம்பமானது. என்ன நண்பர்களே என் கருத்துக்கு நீங்கள் உடன்படுகின்றீர்களா? கேள்விகள் தொடுப்பது உங்கள் அன்பன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...