பின் தொடர்பவர்கள்

0010 கணவன்மார் விற்பணைக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0010 கணவன்மார் விற்பணைக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 நவம்பர், 2020

0010 கணவன்மார் விற்பணைக்கு

 சாதனைகள் தரும் வேதனைகள்   சிறுகதை பேசாலைதாஸ்

                  சாரங்கன் அவனுக்குள் இப்போது பெரும் மாறுதல், மாறுதல் என்று சொல்வதைவிட மன இறுக்கம், ஆம் அதுதான் சரியான சொற்பிர யோகம், முன்பெல்லாம் சாரங்கன், குதூகலமாக ஓடியாடி, துள்ளித் திரிவான். பட்டாம்பூச்சிகளை இமைகொட்டாமல் கூர்ந்து பார் ப்பது, குட்டையில் தத்தித்தத்தி பாய்ந்துசெல்லும், மாரித்தவ ளைக்குப் பின்னால், தானும் அதுபோல அதன் பின்னாள் தத்திதத்தி விளை யாடுவது, தன் வீட்டுவளவுக்குள் வரும் அடுத்த வீட்டு வெள்ளைப் பூனைக்குட்டியை பிடித்து விளையாடுவது இப்படியாக ஆனந்தமாக விளையாடிய சாரங்கன் இப்போது அடியோடு மாறிவிட்டான். அவனுக்குள் பெரும்மாறுதல்!

                                                            அந்த திடுக்கிடும் சம்பவம் அன்றுதான் நடந்தத்து, அடுத்த வீட்டு வெள்ளைப்பூனைக்குட்டி, அடிக்கடி சாரங்கன் வீட்டுப்பக்கம் வரும் என்று சொன்னேன் அல்லவா! அது வழமைபோல அன்றும் வந்தது, அதுதான் அந்த வெள்ளைப்பூனை குட்டியின் இறுதிநாள் என்று அந்த பூனைக்குட்டிக்கு தெரியாது, பூனைக்குட்டி மரணவேதனையால் அலறியது, பக்கத்து வீட்டு பார்வதி அக்கா, கிடுகுவேலி தாண்டி எட்டிப்பார்த்தாள், அதிர்ச்சி யில் உறைந்துவிட்டாள்.

                                                                            சாரங்கன் கையில் கூரிய கத்தி, வெள்ளை பூனைக்குட்டியை மரத்தில் கயிற்றால், அதன் நான்கு கால்களையும் கட்டிவிட்டு, பூனைக்குட்டியின் வயிற்றில் கூரிய கத்தியால் தாறுமாறாக கிழித்திருக்கின்றான் சாரங்கன். வெள்ளைப்பூனைக்குட்டி இரத்தவெள்ளத்தில் தோய்ந்து இருந்த த்து, சாரங்கன் முகத்தில், கண் இமைகளின் அடியில் பூனையின் இரத்தம் வழிந்தோடியது.,,,

                                                                 அல்போன்ஸ், சிறுவர் மனநல ஆய்வாளரின் ஆய்வுகூடத்தில், சாரங்கன் ஆழ்நிலை தூக்கம், வைத்தியர் அல்போன்ஸ், மியாவ்,,,மியாவ்,,,,, பூனைக்குட்டியின் மெல்லிய சத்தத்தை டேப்ரெக்கோடர் உதவியால், அந்த அறை முழுவதுமாக நிரப்புகின்றார். ஆழ்நிலை தூக்கத்தில் இருந்த சாரங்கன் அந்த சத்தம் கேட்டு, தலையை அங்கும் இங்குமாக அசைக்கின்றான், "வெள்ளைப்பூனைக்குட்டியே! உன் வெள்ளை நிறத்தால் கர்வம் கொள்ளாதே, ,,,நீ அவ்வளவு கெட்டிக்காரன் இல்லை, ,,உன்னை என் கோபத்தைப்போல சிவப்பாக்குகின் றேனா,,, இல்லையா பார்,,,, என்ற படி ஏதோ எல்லாம் தூக்கத்தில் பிதற்றுகின்றான்.

                                                        மனநல வைத்தியர் அல்போன்ஸ்ஸுக்கு எல்லாம் புரிந்துவிட்டது, சாரங்கன் மனதில் ஏற்பட்ட விரக்திக்கும், வன்மத்திற்கும் அடிப்படைக்காரனம் எதுவென்று புரிந்துவிட்டது. அது உங்களுக்கு புரியவில்லையா? சற்றுநேரம் இணைத்தளங் களில், முகநூல்களில், பத்திரிகை விளம்பரங்களில் உலாவுங்கள்! "யாழ்ப்பாணத்தில் எங்கள் மகள் சரோஜினி ஐந்தாம் ஆண்டு புலமை பரிட்சையில், 200 புள்ளிகள் பெற்று பெரும் சாதனை படை த்ததயிட்டு பெருமை கொள்கின்றோம். இப்படி பல பெற்றோர்கள், " மன்னார் மாவட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றுசாதனை படைத் துள்ளார், பத்திமா மாகாவித்தியாலய மாணவன் நிசாந்தன் இப்ப டியாகஊடகங்களின் பொறுப்பற்ற செய்திகள்.

                                                         பாழாய்ப்போன இந்த புலமைப்பரீட்சை சாரங்கன் போன்ற பிஞ்சுமனங்களில் வன்மத்தையும், விரக்தி யையும் வளர்த்துவிடுகின்றது. மாணவர்களின் ஆளுமையை, அவன் படைப்பாற்றலை, துறைசார் ஆற்றலை, இந்த கிரகித்தலை மட்டும் அடிப்படையாக கொண்டு, நடத்தப்படுகின்ற போட்டிப் பரிட்சை சரியானதொரு அளவீடாக கொள்ளமுடியுமா? சாரங்கன் போன்ற சராசரி மாணவனுக்குள் எத்தனை மார்க்கோனிகள், அல்வாஎடிசன்கள்,  அப்துல்கலாம்கள், அல்பேர்ட் ஐயன்ஸ்டையன் ஒழிந்திருப்பது யாருக்கு புரியப்போகின்றது,,, யாவும் கற்பனையே! அன்புடன் பேசலைதாஸ் 


துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...