பின் தொடர்பவர்கள்

0518 நிலையில்லா ஆசைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0518 நிலையில்லா ஆசைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஏப்ரல், 2018

0518 நிலையில்லா ஆசைகள்

                            நிலையில்லா ஆசைகள் 

சிந்தனை சிறுகதை பேசாலைதாஸ்

ஒரு பேரரசர் சிறந்த அறிவாளி ஒருவரை தனது பிரதம மந்திரியாக நியமித்தார். ஆனால் அந்த மந்திரி நேர்மையற்றவர். பதவிக்கு வந்த சிறிது காலத்திலேயே பல லட்சம் ரூபாய்களைப் பேரரசரின் கஜானாவிலிருந்து அபகரித்துக் கொண்டுவிட்டார். பேரரசருக்கு விஷயம் தெரிந்ததும் மந்திரியைக் கூப்பிட்டனுப்பினார்.
"நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நீ செய்தது முறையற்ற செயல், நம்பிக்கை துரோகம் என்பதை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நீ இனி என் முகத்தில் விழிக்காதே! இந்த தேசத்தைவிட்டு எங்கேயாவது ஓடிப்போய்விடு. திருட்டு குறித்து வதந்திகள் பரவுவதை நான் விரும்பவில்லை. எனவே யாரிடமும் நான் எதுவம் சொல்லமாட்டேன்' என்றார் பேரரசர். அதைக்கேட்ட பிரதம மந்திரி, "நீங்கள் உத்தரவிட்டால் நான் வெளியேறி விடுகிறேன். நான் பல லட்சம் ரூபாய்களை அபகரித்துக் கொண்டது நிஜம்தான். நான் உங்கள் பிரதம மந்திரியாக இல்லாது போனாலும் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். எனக்கு இப்போது சகல சௌகரியங்களும் இருக்கின்றன. குடியிருக்க பெரிய மாளிகை, கடற்கரைப் பகுதி, மலைவாசஸ்தலங்களில் ஓய்வு இல்லங்கள் உள்ளன. என் குழந்தைகள் இனி பாடுபட்டுச் சம்பாதிக்க வேண்டியதில்லை. நீங்கள் எனக்கு பதிலாக வேறு யாரை மந்திரியாக நியமித்தாலும், அவரும் கஜானாவைச் சுரண்டவே செய்வார்' என்றார். பேரரசர் புத்திசாலி என்பதால் பிரதம மந்திரி என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார். எனக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன என்று சொல்லும் நிலைக்கு ஒருவர், எப்போதும் வருவதில்லை. அந்த நாள் வரும்போது அவரது ஆர்வம் தடைபட்டு நின்றுவிடும். எனவே கஜானாவில் இருந்து இனி திருடமாட்டார் என்பதே பேரரசரின் புரிதல் ஆகும், என்வே அவரையே மந்திரியாக வைத்துக்கொள்ள நினைத்தார்.
ஆம் அன்பர்களே மனிதனுக்கு எண்ணிறைந்த ஆசைகள், ஒன்றில் ஆர்வம் குன்றிவிட்டால் அல்லது திருப்தி ஏற்பட்டுவிட்டால் மற்ற ஆசை உண்டாகும், இனி மந்திரிக்கு பணத்தின் மீது ஆசை இருக்காது ஆனால் பேரரசராக ஆக ஆசைப்படலாம். ஒவ்வொரு கணமும் புதிய ஆசை உங்களைப் பற்றிக் கொள்கிறது. உங்கள் அறிவுக் கருவூலத்தைத் திருட ஒருவன் வந்துவிடுகிறான்.அந்தத் திருடன் வேறு யாருமல்ல. உங்களிடம் எழும் புதிய ஆசைதான் அந்தக் கள்வன். ஒரே நேரத்தில் நீங்கள் பல திசைகளிலும் ஓடுகிறீர்கள். ஒரே சமயத்தில் பல காரியங்கள் செய்ய ஆசைப்படுகிறீர்கள். உங்கள் ஒவ்வொரு இலக்கும் ஒன்றுகொன்று எதிரானவை. எனவே எதையும் அடையமுடியாது என்பதை நீங்கள் உணர்வதில்லை. ஒரு குறிக்கோளைத் தேர்வு செய்யும்போது மற்றொன்றைக் கைவிட வேண்டியிருக்கிறது. இரண்டாவது இலக்கைத் தேர்வு செய்தால் முதல் குறிக்கோள் விலகிச் சென்றுவிடும். அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...