பின் தொடர்பவர்கள்

0051 அஞ்சினவன் துஞ்சினவன் ஆவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0051 அஞ்சினவன் துஞ்சினவன் ஆவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0051 அஞ்சினவன் துஞ்சினவன் ஆவான்

அஞ்சினவன் துஞ்சினவன் ஆவான்

அஞ்சினவனுக்கு சதா மரணம், அஞ்சா நெஞ்சத்து ஆடவனுக்கு ஒருமரணம். அவணிமிசை பிறந் தவர்கள், துஞ்சுவோர் என்று அறிந் தும், சாதலுக்கு அஞ்சும் துன்மதி மூடர்களைக்காண்டால் புன்னகை புரிவேன் யான். இதைச்சொன்னவன் மாவீரன் அலக் சாண்டர். பயம் வந்தால் அறிவு மயங்குகின்றது அத னால் துன்பம் இன்னும் இறுக பற்றிக்கொள்கின்றது. அது மன நோயாக (Phopia Angst) மாறுகின்றது. பயத் தை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை விளக்க இதோ ஒரு கதை. 
                                    வாலிபன் ஒருவன் காட்டுவழியே நடந்து சென்றான். வழியில் பசி எடுத்தது. அங்கே விளாங்காய் மரம் அதில் உச்சனி கொப்பிலே விளா ங்காய் தொங்கிகொண்டிருந்தன, அதனை பறிக்க மர த்தின் நுனிவரை ஏறினான். கனியை பறிக்கும் போது அது முறிந்து விழவே, சட்டென்று அடுத்த கிளை யை தாவிப்பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான்.  கீழே  பார்த்தான் மிக உயரத்தில் தொங்குவதாக அவன் உணர்ந்தான். பயம் அவனை ஆட் கொண்டு விட்டது. என்னை காப்பாற்ற யாரும் இல்லையா என்று அலறினான். அந்தவழியாக வந்த, முதியவர் ஒருவர், ஒரு கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார். என்ன முதியவரே எனக்கு உதவி செய்வதை விடு த்து, கல் எறிகின்றீரே என்று கத்தினான். முதியவர் மீண்டும் ஒரு கல்லை எடுத்து எறிந்தார். பெரியவரே உமக்கு பைத்தியமா? என்னை கொல்லப்பார்க்கின் றீரா கீழே வந்து உம்மை என்ன செய்கின்றேன் என்று பாரும் என்று சொல்லி, பலமாக உண்ணி அடு த்த கிளையை தாவிப்பிடித்தான். முதியவர் மீண்டும் ஒரு கல்லை அவன் மீது வீசி எறிந்தார். சடசடவெ ன்று கீழே இறங்கிவந்த வாலிபன், முதியவரிடம், எனக்கு உதவி செய்யாமல், என்னக்கு கல்லெறிந்து கொல்லப்பார்த்தீரே என்று சொல்லி வாயில் வந்த படி ஏசினான். அதற்கு அந்த முதியவர் அமைதியாக, தம்பி நான் உனக்கு உதவிதான் செய்தேன், நீ பயத்தி னால் அலறினாய், நான் உனக்கு கல் எறிந்த‌ போது உன் அலறல் ஆத்திதிரமாக மாறி, துணிவை தந்தது உன்னை உன்னாலே காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்ற உன் அறிவை, பயம் மறைத்துவிட்டது. என்று பதில் சொன்னார் அந்த முதியவர்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...