பின் தொடர்பவர்கள்

0288 நான் என்ன உன் அடிமையா?" லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0288 நான் என்ன உன் அடிமையா?" லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 டிசம்பர், 2015

0288 நான் என்ன உன் அடிமையா?"

நான் என்ன உன் அடிமையா?"

அன்பர்களே! மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினை பபார்களோ என்று எண்ணி, சிலவேளைகளில் நாம் பல நன்மை யான விடயத்தை தவறவிடுகின்றோம். நமது மனசாட்சி நமக்கு என்ன கட்டளை இடுகின்றதோ அதைத்தான் நாம் செய்ய முயலவேண்டும். மற்றவர்க ளின் எண்ணப்படி, மற்றவர்களின் கோபத்தை சம்பாதித்து விடக்கூடாது என்ற சுய நீதியில் நாம் வாழ முற்பட்டால், நாம் ஒரு அடிமை வாழ்வு வழ்கின்றோம் என்று அர்த்தமாகிவிடும். நமக்கு நாம் தானே நீதிபதிகள், நமது நன்மை தீமையான செயல்களுக்கு நாம்தானே பொறுப்பு வகிக்கவேண்டும். நமது மரணத்தின் போது சொர்க்கத்தின் வாசாலில் நின்று நீ செய்த நன்மைகள் என்ன அதைச்சொல் உன்னை நான் சொர்க்கத்தி ல் அனுமதிக்க என்று கடவுள் கேட்கும் போது நம்மிடம் என்ன இருக்கின்றது அன்பர்களே! எனவே நமது செயல்கள் நன்மை யானதாக இருக்கின்றதா? என்பதை நமது மனசாட்சி சான்று பகரவேண்டும் அதற்கு நமக்கு நாமே தலைவனாக இருக்க வேண்டும் யாருக்கும் அடிமையாக இருக்க எத்தனிக்காதே அன்மையில் நான் வாசித்த புத்தரின் தத்துவக்கதை அழகாக விபரிக்கின்றது.  ஒருமுறை கெளதமபுத்தர் ஒரு பாதையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவர் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி, எச்சிலை துப்பினார். தன் மேல்துண்டால் அதை துடைத்துவிட்டு, "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற புத்தரின் சீடன்ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர், ஆன ந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா, இவர் ஏதோ சொல்லவிரும்பு கிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை, இவர் என்ன செய்ய முடியும்?" என்று கூறி விட்டு சென்று விட் டார். 

                                             துப்பியவருக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் உறக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டுபிடித்து, அவரது காலில் விழு ந்து அழுதார். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செ யலை செய்துவிட்டார்..!" என்றார். அவர் எழுந்து கேட்டார், "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை?" என்று. அப்போது புத்தர் அழகாக பதில் சொன்னார், "நீ எண்ணியதுபோல் நடக்க, நான் என்ன உன் அடிமையா?" என்று. ஆம் அன்பர்களே! மற்றவர்கள் தமது லாபங்களுக்காக நம்மை உபயோகப்படுத்த ஒருபோதும் அனுமதிக்ககூடாது. எது நீதி, எது தர்மம், எது உசி தம் என்பதை உணர்ந்து செயல்படுவோம். அன்புடன் என்றும் உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...