ஆசிரிய ஜோதி!
ஒரு முறை அரிஸ்டோட்டில் தனது சீடர்களுடன் ஆற்றங்கரை க்கு நீராடச்சென்றார். கரை யில் ஆற் றின் நிலைமை அறிய சற்று காத்திருந்தார். அப்பொழுது திடீரென அலக்ஸ்சாண்டர் என்ற ஒரு சீடன் ஆற்றிலே பாய் ந்து மறு கரை வரை நீந்திச் சென்று திரும்பிவந்து அரிஸ்டாட்டிலிடம் குருவே ஆற்றில் நீரோட்டம் நன்றாகவே இருக்கின்றது நீங்கள் பயப்படாமல் ஆற் றில் இறங்கலாம் என்றான். அதற்கு அரிஸ்டாட்டில் நீ ஆற்றிலே ஆறியாமல் இறங்கினாய் ஒரு வேளை ஆறிற்லே சுழிகள் இருந்திருந்தால் உன் நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்தாயா? என்று அந்த சீடனை எச்சரித்தார். அதற்கு அந்த சீடன் பவ் வியமாக குருவே இந்த அலக்ஸ்சாண்டர் இறந்து போனால் ஆயிரம் அலஸ்சாண்டர்களை ஆக்கும் திறன் உங்களுக்கு உண்டு ஆனால் உங்களை நாங் கள் இழந்துவிட்டால் எங்கள் நிலைமை என்னவா கும்? என்று பதில் அளித்தான். நல்ல தலைவர்களும் ஆசிரியர்களும் காலம் நமக்குத்தரும் அற்புத பரிசு கள். அபப்டிப்பட்டவர்களை இழப்பது ஒரு சமூகத்து க்கு பாரதூரமானது.
இந்த கதை பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்த கதை பற்றி உங்கள் கருத்து என்ன?