பின் தொடர்பவர்கள்

0053 அவரவர் செயலுக்கு ஏற்ற பலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0053 அவரவர் செயலுக்கு ஏற்ற பலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0053 அவரவர் செயலுக்கு ஏற்ற பலன்

அவரவர் செயலுக்கு ஏற்ற பலன்

அவரவர் செயலுக்கு ஏற்ற பலனை அவரவர்கள் அனுபவிப்பார்கள். இது எல்லா மதங்களும் சொல்லும் பொதுவான தத்துவம். பைபிளில் கூட இப்படி சொல்லப்படுகின்றது. இதோ அவரவர் செயலுக்கேற்ற சம்பாவணை என் னோடு கூட வருகின்றது என்று யேசு சொல்வதாக கூறப்படுகின்றது. இதனை விளக்க ஆசிரியர் ஒரு வர் தன் மாணக்கர்களுக்கு ஒரு கதை சொன்னார். விவசாயி ஒருவர், ஒரு இறாத்தல் வெண்ணெயை ஒரு பேக்கரிக்காரருக்கு தினமும் விற்று வந்தார். ஒரு நாள் அந்த பேக்கரிக்காரர், விவசாயி கொடுக் கும் வெண்ணெய் ஒரு இறாத்தல் அளவு சரியாக உள்ளதா? என்று எடை போட்டு பார்த்தார். அப்போது அளவு குறைவாக இருந்தது என்பதை தெரிந்து கொண்ட அந்த பேக்கரிக்காரர் விவசாயி மீது கடுங் கோபம் கொண்டார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த விவசாயியை நீதிமன்றத்திற்கு அழை த்து சென்றார். அப்போது நீதிபதி விவசாயிடம், "வெண்ணெயை அளந்து பார்க்க எந்த எடை மிசினை உபயோகிக்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி 'நியாயம்' என்று பதிலளித்தார். பின் நீதி பதியிடம், "நான் பழங்காலத்தவன், என்னிடம் சரி யான எடை மிசின் இல்லை. ஆகவே நான் ஒரு அள வுகோல் கொண்டு அளவு செய்வேன்" என்றார். உட னே நீதிபதி "வேறு எப்படி வெண்ணெயை எடை செய்தாய்?", என்று கேட்டார். அதற்கு விவசாயி நீதி பதியிடம் "ஐயா! பேக்கரிக்காரர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வெண்ணெய் வாங்குவது வழக்கம், நானும் அவரிடமிருந்து ஒரு இறாத்தல் பானை வாங்கி வருவேன். ஒவ்வொரு நாளும் பேக் கரிக்காரர் ஒரு இறாத்தல் பானை, கொண்டு வந்த அதே சமயம், நானும் அதே அளவில் வெண்ணை யை வெட்டி கொடுப்பேன். ஆகவே குறை, குற்றம் சொல்ல வேண்டுமெனில் அது என் தவறு இல்லை, அது முற்றிலும் பேக்கரிக்காரரை சார்ந்தது" என்று சொன்னார்." எனக் கதையை கூறி முடித்துவிட்டார். பின் மாணவர்களுக்கு, "நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அதே தான் நமக்கும் விதிக்கப்ப டும்" என்று கூறி விளக்கினார்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...