பின் தொடர்பவர்கள்

0219 பாட்டொன்று கேட்டேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0219 பாட்டொன்று கேட்டேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2015

0219 பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
மனமகிழ்ச்சியோடு வாழ்வது என்பது மிக ச்சிறந்த கலை! ஒருசிலர் அதை நன்றாக ப்புரிந்து வைத்துள் ளார்கள், ஆனால் பலர் தம் வாழ்வை நினைத்து அழு த்துக்கொள்கி ன்றார்கள். ச்சே! என்னடா வாழ்க்கை இது, என்று அழுத்துக்கொள்பவர் பலர். இவர்கள் வெகு எளிதில் மன உளச்சலுக்கு ஆளாகி துன்ப படுகின்றனர். நான் மானோரம்பிய மாக வாழத்தெரி ந்து கொண்டேன் என்று இயேசுவின் முதன்மைச் சீடன் இராயப்பர் சொல்கின்றார். ஒருமுறை ஒரு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர் தங்கள் முன்னாள் பேராசிரியரைச் சந்தித்து தங்களின் வாழ் க்கை பற்றியும், தொழில் பற்றியும் பகி ர்ந்து கொண்டிருந்தனர். வாழ்க்கை இய ந்திரத்தனமாகவும்,அமைதி இன்றியும், மன உளைச்சலைத் தரக்கூடியதா கவும் உள்ளது எனச் சொல்லி ஆதங்கப்பட்டனர். திடீரென்று சமையலறைக் குச் சென்ற பேராசிரியர், சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக வித வித மான கோப் பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை யுயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி, பிளாஸ்டிக், காகிதம்' போன்ற சாதா ரண கோப்பைகள் வரை  பல வகைகள் இருந்தன. அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துக்கொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங் கள் என்று பேராசிரியர் கூற, முதலில் இருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பை களை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அடுத்து வந்தவர்க ளுக்கு சாதாரண கோப் பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்ப ட வில்லை. அனைவரும் தங்களுக்குக் கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர். அப்போது பேராசிரியர், பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளைப் பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டு மென்று விரு ம்புகிறீர்கள். கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததைத் தேர்ந்தெடுக் கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத் தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவ தில்லை. விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறை ந்து விடப்போவதில்லை. உண்மையில், சில கோப்பைகளில் உள்ளே என்ன உள் ளது என்பதுகூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்கு த்தான் முக்கியத்துவம் கொடு க்கிறோம். அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத் தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றால் நமக்கு அது கிடைக்கவில் லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடை த்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள். வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் சமூகநிலை போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கை க்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப் பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியைப் பாருங்கள். மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்த தைப் பெற்றிருப்பதி ல்லை. தாம் பெற்றிருப்பதைச் சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர் களை கவலைகளும் அழுத்தங்க ளும் அதிகமாக நெருங்குவதில்லை. "எளிமை யாய் வாழுங்கள்! கருணையுடன் பேசுங்கள், அனைவரையும் அன்பு கூருங் கள்! வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்" என்றார் பேராசிரியர். அந்த பேராசி ரியரின் வாழ்வின் அனுபவ த‌ரிசனம் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ளது என் பதை கவனியுங்கள். வாழ்வின் கவலைகளை விட்டுத்தள்ளுங்கள், விட்டுவிடு தலையாகி, அந்த சிட்டுக்குருவி போல என்று பாரதி பரவசமாய் பாடுவதை ப்போல நீங்களும் பரவசம் கொள்ளுங்கள். பாட்டொன்று கேட்டேன் நான் பரவசமானேன். பரவசப்பட்டவர் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...