பின் தொடர்பவர்கள்

0232 காதல் சடங்கில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0232 காதல் சடங்கில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜனவரி, 2020

0232 காதல் சடங்கில்

கல்யாணம் என்ற சடங்கில்  காதல் செத்துப்போகின்றது ,,, பேசாலைதாஸ் 


     
                                             காதல் கனி ந்து வந்தால் அது கல்யாணத் தில் முடியும்,  ஆனால் கல்யா ணம் என்பது இயல்பான ஓர் புரிந்துணர்வாக இருக்கவேண்டும்,  எந்த நிர்ப்பந்தமோ அதில் இருக்கக்கூடாது, நம்ம வீட்டில் கல்யாணம் அப்படியா நடக்கின்றது, காதல் என்றாலே சாதி, சமயம், இனம், படிப்பு, உத்தியோகம் பார்த்து மலர்கின்றது இதற்கிடையில் , கல்யாணம் என்பது இயல்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது சுத்த பைத்தியக்கார தனமாக எனக்கு படுகின்றது,


                                                 ஒரு ஆணுக்கும் பெண்ணு  க்கும் இடையே காதல் ஏற்படுகிறது, அவர்கள் எல்லோரையும் போல் உடனே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், அந்தப் பெண் நாகரீகமான செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் திருமணம் செய்து கொள் ளும் முன் அவனிடம் ஒரு நிபந்தனை விதிக்கி றாள். அதற்கு அவன் எந்த நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள நான் தயார், ஆனால் நீ இல்லா மல் நான் வாழ முடியாது என்று கூறுகிறான்.
அதற்கு அவள் முதலில் நிபந்தனையைக் கேள்
அதன் பிறகு யோசிக்கலாம் என்றாள் 


                                      இந்த நிபந்தனையின்படி நாம் இருவரும் ஒரே வீட்டில் வாழக் கூடாது, எனக்கு சொந்தமாக நிறைய நிலம் இருக்கிறது! அதில் ஒரு அழகிய ஏரியும் அதைச் சுற்றிலும் அழகிய தோட்டங்களும் உள்ளன! அந்த ஏரியின் ஒரு பக் கத்தில் நான் எனக்காக ஒரு வீட்டைக் கட்டிக் கொள்வேன்! அதற்கு எதிர் கரையில் உனக்கெ ன்று ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பேன்.

                                               அப்படியானால் திருமண வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று அந்த காத லன் கேட்டான்? அதற்கு அந்த காதலி கூறினாள்
திருமணம் என்பது ஒருவரையொருவர் அழித் துக் கொள்வதல்ல, உனக்கென்று ஒரு வெளியிட மும் எனக்கென்று, ஒரு வெளியிடமும் இருக்க வேண்டும். இருவருக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும்.


                               அவ்வப்போது நாம் தோட்டத்தில் உலாவும் போது சந்திப்போம். ஏரியில் படகு களை ஓட்டிச் செல்லும்போது இருவரும் சந்தித் துக் கொள்வோம். இவைகள் எல்லாம் தற்செய லாக நடக்க வேண்டும். எப்போதாவது நான் உன்னை டீ சாப்பிடக் கூப்பிடுவேன். அதுபோல் நீயும் என்னைக் கூப்பிடுவாய். அதற்கு காதலன் இது ஒரு அர்த்தமற்ற ஏற்பாடாக இருக்கிறதே என்று சொல்லி விட்டான்.

                                                 அதற்கு காதலி அப்படியா னால் திருமணம் என்ற பேச்சை மறந்துவிடு என்றாள். இப்படி இருந்தால் மட்டுமே நமது காதல் தழைத்து வளர முடியும். நாம் எப்போதும் தளிர்போல் புதிதாக இருப்போம். ஒருவர் மற்றவ ருக்கு எப்போதும் மதிப்பு கொடுப்போம். என் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற் காமலும் இருந்து விடலாம். நம்முடைய சுதந்தி ரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அப் போது நம்மிடையே அன்பு ஒரு அழகிய இயல் நிகழ்வாய் மலரும். அந்தக் காதலனுக்கு இதெல்லாம் புரியவில்லை. அவன் திருமணத்து க்கு சம்மதிக்கவில்லை.

                                                                 கல்யாணம் என்ற சடங்கில்  காதல் செத்துப்போகின்றது, காதல் வாழவேண்டும் என்றே இந்த காதலி நினைக்கி ன்றாள் அவளின் எண்ணம் எல்லாம்,,,,,காதலர் இருவருக்கிடையே இடைவெளி நெருக்கம் இர ண்டுமே இருக்க முடிந்தால் மட்டுமே சொர் க்க லோகத்தில் வீசும் காற்று இருவருக்கிடையே வீசும். அன்பு என்பது ஒரு இலவச பரிசாக இருக்க வேண்டும். அதைக் கொடுக்கலாம் அல்லது எடுத்துக் கொள்ளலாம்.

                                           ஆனால் ஒருவித கட்டாயம் அதில் இருக்கக் கூடாது । இதுதான் அந்த காதலி யின் ஏக்கம், இதைத்தான் ஒவ்வொரு பெண் களும் தேடுகின்றார்கள் காதல் கல்லறைவரை தொடரவேண்டுமா அல்லது கல்யாணத்தில் கரைந்துவிடவேண்டுமா?   

அன்புடன் பேசாலைதாஸ் 

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...