பின் தொடர்பவர்கள்

0416 குருவை மிஞ்சிய சீடன்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0416 குருவை மிஞ்சிய சீடன்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

0416 குருவை மிஞ்சிய சீடன்!

குருவை மிஞ்சிய சீடன்!

அன்பர்களே! என் பள்ளி வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தோடு என் எண்ணங்களை சிதறவிடுகி ன்றேன். நான் பல்கலைக்கழ கம் செல்லுமுன்னர் எனது ஆரம்ப பாடசாலை என் ஊரில் உள்ள பத்திமா பாடசாலை, ஒன்பதாம் வகுப்பில் படித்து க்கொண்டிருந்தேன். ஜோதி டீச்சர், நல்ல உயரம்,  கொஞ்சம் கறுப்பு, இளமை முறுக்கேறிய டீச்சர்! அவர் எங்களுக்கு சுகாதார பாடம் கற்பிக்கின்றவர். ஒரு நாள் இரத்த சுற்றோட்டம் பற்றி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஜோதி டீச்சர், நான் தலை கீழாக நின்றாள், இரத்தம் எல்லாம் தலைக்கு வந்து, முகம் சிகப்பாகின்றது. ஆனால் நான் நிற்கின்ற போது எனது பாதம் சிகப்பாக மாறுவதில்லை அது ஏன் என்று எங்க ளிடம் கேள்வி கேட்டார். உடனே சகாயம் சில்வா என்றமாணவன்,  சட்டென்று " அதுவா டீச்சர் எங்கே வெற்றிடம் அதாவது காலி யான இடம் இருக்குதோ அங்கே இரத்தம் அதிகமாக போகும்" என்று சட்டென்று சொன்னான். டீச்சருக்கோ அவமானமாகிவி ட்டது! ஏன் என்று உங்களுக்கு புரியும் என்று நினைகின்றேன். 

                                           அன்பர்களே போவதற்கு அல்லது வாழ்வதற்கு உகந்த இடம் எது என்று நாம் சிந்தித்தால் சில்வா என்ற எனது பள்ளி தோழனின் பதில் நம்மை சிந்திக்க தூண்டும். ஆனால் சில்வா என்ற மாணவனின் எண்ணமோ  டீச்சரின் மண்டை காலியாக இருக்கின்றது என்பதை கிண்டலாக பதிலில் சொல்லி யிருக்கின்றான். நாம் நிம்மதியாக வாழும் இடம் நம்மில் தான் இருகின்றது. நாம் நினைத்தால் இபொழுது வாழும்  இடத்தையே  அமைதியான சந்தோசமான கோவிலாக மாற்றிவிடலாம்.  ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்,,,  ஆனந்த மாளிகை போலாகும் நல்ல சேவை செய்தால்,, என்ற படல் உண்டு. இதை ஒரு சின்ன கதையோடு ஒப்பிடுகின்றேன்.           

                                                                      உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்த ஒரு  குரு இருந்தார். அவரிடம் புதிதாக ஒரு சீடன் சேர்ந்தான். ஒருநாள் அவருடன் வெளியில் சென்றிருந்தபோது, திடீரென்று மழை பிடித்துக்கொண்டது. சீடன் அவசரமாக ஒரு பெரிய இலையை வாழை மரத்திலிருந்து பிரித்து அதைத் தலை க்கு மேலாகப் பிடித்துக்கொண்டான். குருவிடம் அவன் கேட்டான்: “உலகின் எத்தனையோ பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறீர்களே, கோடை காலத்துக்கு உகந்த இடம் எது..? மழைக்காலத்துக்கு உகந்த தேசம் எது..? குளிர்காலத்துக்கு எங்கே சென்றால் நிம்மதியாக இருக்கும்..?” குரு மழையில் நடந்தவாறு, “உண்மையிலேயே சுகமாக இருக்க வேண்டும் என்றால், கோடை யோ, மழையோ, குளிரோ இல்லாத தேசத்துக்கு நீ செல்லலாமே..!” என்று சொன்னார். “நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா..?” “ம்..!” “அது எங்கே இருக்கிறது என்று எனக்குச் சொல்வீர்களா..?” “கண்டு பிடித்துப் போ..!” என்று சொல்லிவிட்டு, குரு நிற்காமல் நடந்தார். இரவா பகலா, குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாது. நம் மனம் மட்டும் உறுதியாக இருந்தால்,,,,,,, கடுங்குளிர் நோர்வேயில் குளிரால் நடுங்கிக்கொண்டு இதை சொல்கின்றேன். என்றும் அன்பில் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...