பின் தொடர்பவர்கள்

0272 அச்சம் என்பது மடமையடா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0272 அச்சம் என்பது மடமையடா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2015

0272 அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!,,,,,

அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!,,,,,

அன்பர்களே அச்சனம் என்றவுடன் பேய் பிசாசு அல்லது இராணுவம் இவைகளை கண்டு மிரள்வது அல்ல, இங்கே நான் சொல்லவரும் அச்சம் தவிர் என்பது பழி பாவங்க ளுக்கு அஞ்சுதல், அநியாயம், கொடுமைகளை கண்டு அதை எதித்து நிற்க முடியாமல் அச்ச த்தால் கோழைகளாக மாறும் ஆண்மையற்ற செயலைத்தான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விழைகின்றேன். அச்சம் தவிர், ஆண்மை கொள் என்றான் பாவேந்தன் பாரதி. இங்கு எத்தனை பேர் ஆண்மை கொண்டவர்களாக இருக்கி ன்றார்கள் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அஞ்சாமல் கேள்வி கேட்டால், மற்றவர்கள் நம்மை பகைப்பார்களே! என்ற அச்ச உணர்வால், சில அநியாயங்களையும், பணச்சுரண்டல்களையும் கண்டும், காண தவர்கள் போல இருக்கின்றனர். உண்மையில் நமக்குள் உறைந்து போயுள்ள அச்ச உணர்வினால் தான், அதர்மங்களும், அநியாயங்களும் உலகில் தலைதூக்குகின்றது. அச்சம் எல்லாவற்றிற்கும் துணைபோகி ன்றது. அதனை உணர்த்தும் ஒரு கதை இது!
ஓர் அரசர் அந்நிய நாட்டின் மீது போர் தொடுத்து தோற்றுப் போனார். தோல்வி அவருக்குப் பயத்தைக் கொடுத்தது. சில காலம் கழித்து அவர் மறுபடியும் படையெடுத்தார். வெற்றியும் கண்டார். வெற்றியும் அவருக்குப் பயத்தைக் கொடுத்தது. தோற்றுப்போன மன்னர் எந்த நேரத்திலும் வந்து படையெடுப்பான் என்று அஞ்சினார் அவர். இப்படி பயத்தில் வாழ்ந்து வந்த அந்த அரசர் ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அங்கே ஒரு துறவியைச் சந்தித்தார். துறவியாரே, இந்த நாட்டு மன்னர் நான், உங்களுக்கு எனது உதவி எதுவும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்றார். துறவி அவரை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் சொன்னார் - நீ என்னுடைய அடிமையின் அடிமை, அப்படியிருக்க நீ எப்படி எனக்கு உதவ முடியும் என்று. அரசருக்குக் கோபம் வந்தது. ஆயினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், துறவியாரே, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு துறவி, என்னுடைய அடிமைகளில் ஒருவனிடம் நான் உதவி கேட்பது முறையாக இருக்காது என்று சொல்கிறேன் என்றார். துறவியாரே, கொஞ்சம் புரியும்படிச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார் அரசர். அதற்கு துறவி, என்னிடம் ஓர் அடிமை இருக்கிறான். அவன் உனக்கு முதலாளி என்றார். உங்களிடம் அடிமையாக இருப்பது யார்? என்று அரசர் மறுபடியும் கேட்க, அச்சம் என்றார் துறவி. தலைகுனிந்தார் அரசர். பதவியில் இருக்கிறவர்கள் பயத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பயத்தின் காரணமாகவே பதவியையும், விடாமல் பற்றிக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆம். அடிமையின் அடிமை அச்சம். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...