உன் ஆன்மாவே உன் பிரதிபலிப்பு பேசாலைதாஸ்
ஆன்மா அது ஒன்றே நமது ஆளுமையின் பிரதிபலிப்பாகின்றது "ஆத்மாவில் மையம் கொண்டிருங் கள். அதைப் பற்றிய விவாதங்களை வலியு றுத்தாதீர்கள்.'- கோரக்க சித்தரின் சூத்திரம் ஒன்று கூறுகின்றது ஆன்மா (இருப்பு,BEING) என்பதே உண்மை.அது வெறுமனே கண்ணாடி.அதன் மேல் 'நான்' என்ற அகந்தை எதனைப் பதிகிறதோ அதனை அது பிரதிபலிக்கிறது.நான் இஞ்சினியர் என்று நீ எண்ணினால் அது உன்னை இஞ்சினி யராகக் காட்டும்.நான் டாக்டர் என்று நினைத்தால் அது உன்னை டாக்டராகக் காட்டும்.நீ எதனை மனதில் பதிகிறா யோ அதுவாகவே நீ ஆகி விடுகிறாய்.சமயங்களில் நீ எதிர் பாராமலேயே ஒரு விபத்தைப் போலவும் உனது பிம்பம் உருவாகி விடும். அதற்கு ஒரு உதாரணமே இவ்த்தை சந்தர்ப்ப கதை!
அது மட்டுமல்ல ஆறு வருடங்கள் கழித்துத் தேர்வுகளில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு மதிப்பெண் கள் பெற்று உலகப் புகழ் பெற்ற மண்ணியல் துறை விஞ்ஞா னியாக ஆகிறான்! கடவுளைப் பற்றிப் படிக்கப் போன வன் வாழ்க்கை முழுதும் மண்ணைப் பற்றி ஆராய்ந்து கொண்டி ருக்கிறேன் என்று பின்னாளில் அவன் சொல்கிறான். எனவே நீ யார் என்று,யார் அல்லது எது தீர்மானிக்கிறது? ஆழ்ந்த உறக்கத்தில் நீ இஞ்சினியரோ, டாக்டரோ வணிகரோ இல்லை.