பின் தொடர்பவர்கள்

0436 எதையும் தாங்குவேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0436 எதையும் தாங்குவேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மார்ச், 2017

0436 எதையும் தாங்குவேன் அன்புக்காக!

எதையும் தாங்குவேன் அன்புக்காக!

சிவாஜிகணேசன் நடித்த தங்கைக்காக படத்தை நான்கு தினங்களுக்கு முன் ஒன் லைன்னில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டி யது, பார்த்த நாளில் இருந்து, அண்ணன் தங்கை பாசம் என்னில் நெருடலான உணர்வுகளை நெஞ்சில் படரவைத்தது, கூடவே " எதையும் தாங்குவேன் அன்பு க்காக, நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக என்ற கண்ணதாஸனின் பாடலும், கதைக்கு தூபம் காட்டுவது போல ஒரு நறுமணம். இந்த எண்ணச்சுழி யில் சிக்கித்தவித்த எனக்கு, எங்கேயோ, எப்போதோ நான் கேட்ட அந்த சம்பவம் ஒரு கதையாக என் சிந்தனையில் வழி ந்தது!
                                                                                                                               ரூபன் அவனுக்கு ஆறு வயது இருக்கும்,  அவனுக்கு  உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார். இப்போ இரு ப்பது அம்மாவும் ரோஸி என்ற சின்ன‌ தங்கையும் தான்.  அம்மா கடைக்கு அப்பம் சுட்டு கிடைக்கின்ற கொஞ்ச வருமானத்தில் தான் அன்றாட பிழைப்பு. ரோஸி என்றால் அவனுக்கு உயிர் மாதிரி. ஒரு நாள் தன் தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான் ரூபன்.

                                                                                ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான் ரூபன். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அத ற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு ரூபன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இரு ந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். ரூபனுக்கு மட்ட மகிழ்ச்சி, ரோஸியோ புதுப்பொம்மையை இறுக கட்டிப்பிட்த்த வண்ணம் கற்பனையில் மிதந்தாள்.  மகிழ்ச்சியோடும், ஒருவித பெரு மையோடும், மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு சென்றான்

                                                               இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம், "அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உய ர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.  அதற்கு அந்த முதலாளி, 'அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன். மேலும், 'தன் தங்கை கேட்டவ ற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்று சொல்லவும் நான் சிந்தனை உலகத்தில் இருந்து, விடுபடவும் சரியாக இருந்தது

                                             "அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிரு க்கின்றதோ என்ற எண்ணம் எனக்குள் தொத்திக்கொண்டது. . அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...