பின் தொடர்பவர்கள்

0231அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் துயரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0231அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் துயரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜனவரி, 2020

0231அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் துயரங்கள்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் துயரங்கள் 

                                                                                   பேசாலைதாஸ் 

                 துயரமும் துன்ப மும் இன்பமும் கலக்கா மல் வாழ்க்கை இல்லை எல்லோருக்கும் கவ லைகள் உண்டு, அது மற்றவர்களுக்கு புரி வதில்லை, தான் மட் டுமே உலகில் அதிக கவலைகளுடன் வாழ்வதாக பலர் நினைப்பது ண்டு, அப்படிப்பட்ட  ஒரு மனிதன், ஒரு நாள்  கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்

                                               "நான் உலகிலேயே அதிக துயரமுடையவனாக இருக்கிறேன். என் வாழ் நாள் முழுவதும் பிரார்த்திக்கிறேன். எனக்கு அதிகமாக ஒன்றும் வேண்டாம்."என் துயரங் களை நீங்கள் யாரிடமாவது மாற்றிக் கொடுத்து அவருடையதை நான் பெற்றுக் கொள்ள வேண் டும். ஏனெனில் மற்ற அனைவரும் மகிழ்வுடன் உள்ளனர். நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள். " என கடவுளிடம் மன்றாடினான்,
                                                   அன்றிரவு அவன் ஒரு கனவு கண்டான்.வானிலிருந்து இடி போன்ற குரல் ஒலித்தது "அனைவரும் அவரவர் துயரங் களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி விரைந்து வாருங்கள் ". தன் பிரார்த்தனைக்குக் கடவுள் காது கொடுத்துவிட் டார் என்று அவன் நினைத்தான். உடனே அவன் தன் துயரங்களை ஒரு பையில் நிறைத்துக் கொண்டு சாலையில் வந்தான். சாலையில். அவன் கையில் இருந்த பைதான் சிறியதாக இரு ந்தது. பலர் பெரிய பெரிய பைகளைத் தூக்கிச் சென்றனர். சிலர் பணியாட்களின் தலைகளில் சுமைகளாக வைத்துச் சுமந்து சென்றனர்.


                                   அவனுக்கு வியப்பாக இருந்தது. 'இறைவா! இவர்கள் எல்லோரும் பெரும் பெரும் கவலைகளுடன் இருக்கும்  மனிதர்கள். என நான் தெரிந்து கொண்டேன், இறைவன் ஏன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. நான் என் சிறிய பையு டன் வீடு திரும்பி விட்டால் இறைவனுக்கு நன்றி கூறுவேன் ' என்று நினைத்தான்.
                                                         கோவிலில் மறுபடியும் கடவுளின்  குரல் ஒலித்தது "எல்லோரும் அவர வர் பைகளை சுவரில் தொங்கவிடுங்கள். பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டு மணி அடிக்கப் படும். இருளில் உங்களுக்கு வேண்டிய பையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனவே வெளிச்சம் உள்ளபோதே உங்களுக்குத் தேவை யான பையருகே நின்று கொண்டால் இருட்டில் தவறவிட மாட்டீர்கள் ".


                                                 பிரார்த்தனை புரிந்தவன் தனது பையை பிடித்திருந்தான். மற்றவர்களும் அவ்வாறே நின்றிருந்தனர். அவன் ஆச்சரியம டைந்தான். பக்கத்தில் நின்றவர்களிடம் கேட் டான். "இவர்கள் ஏன் பைகளை கடவுள் அறிவித் தபடி தொங்க விடாது  கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?"  

                                                           அவர்கள் சொன்னார் கள்: "நீ ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாயோ அதே காரணத்திற்காகத்தான். இப்போது நம் கவலைகளைப் பற்றி நமக்கு ஓரளவாவது தெரி யும். ஆனால் மற்றவர்களது துயரங்கள் நமக்கு பரிச்சயம் இல்லாததும் அறியாததும் அல்லவா!
இந்த வயதில் ஏன் ஒன்றுமில்லாததிலிருந்து ஆர ம்பிக்க வேண்டும்? நம் பழைய கவலைக ளுடன்  வாழ்வதே மேல்! " இப்படியாக எல்லோரும் நினைத்துக்கொண்டு, அவரவர்  தங்கள் பைக ளுடன் கோவிலைவிட்டு மிகவும் ஆனந்தமுடன் ஓடினர்.
                           "கடவுள் மிகவும் கருணையுள்ளவர். என்னை சகதியிலிருந்து காப்பாற்றியுள்ளார். மக்கள் எவ்வாறு துயரங்களை மறைத்துள்ளனர். பெரிய பைகளைச் சுமந்தவர்களை மகிழ்ச்சி மிக்கவர்கள் என நினைத்தேனே!" என்று அவன் நன்றியுடன் பிரார்த்தித்தான்.


                                 இந்த கதையில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? ஒருவரும் தங்கள் உண்மை சொருபத்தைக் காட்டுவதில்லை அதே போல மற்றவர்களின் கவலைகள் எவ்வளவு பெரிது என்பதை நாம் சிந்திப்பதில்லை, என் னைவிட மற்றவர்கள் சந்தோசமாக வாழ்கின்றா ர்கள் என தவறாக நினைக்கின்றோம், அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் கவலைகள் இருக்கும் அதை யார் அறிவார்?   தேடுவோம் புரிந்து வாழ்வோம் 

                                              அன்புடன் பேசாலைதாஸ் 


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...