பின் தொடர்பவர்கள்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

என் உள்ளத்தில் குடிபுகுந்தாள்! சிறுகதை பேசாலைதாஸ்

 என் உள்ளத்தில் குடிபுகுந்தாள்! சிறுகதை   பேசாலைதாஸ்

ஆவணித்திங்கள் பதினாலாம் திகதி இரவு பத்து மணி,மடுக் கோவி லைச் சுற்றி எங்குமே மின்சாரகுமிழி கள் ஒளி எச்சில்களை துப்பி கொண்டிருக்க, போதாக்குறைக்கு நிறை பெளர்னமி, முழுமதி வானில் குளிர்நிலவை பரப்ப, மருதமடு அன்னையின் அலங்கார தேர், வெள்ளிக்கொன்றை குடையோடு நகர, அன்னையவள் அருள் முகம், முழுமதியை ஏளனம் செய்வது போல, அருள்பாலித்துகொண்டிருந்தது. நாளை விடிந்தால் மருத மடு அன்னை யின் திருநாள், வழமையாக திருநாளுக்கு முன் இரவு, வேஸ்பர் என்று இஸ்பெயின் மொழியில் அழைக்கப்படும், திருத்தேர் பவணி இடம் பெறும், இது கத்தோலிக்க பாரமரியத்தின் உலகளாவிய ஓர் தேர் உற்ச்சவம். 

நானும் அன்னையின் அருள்வேண்டி, மடுத்திருப்பதிக்கு பயணம் செய்து, அந்த இரவில் இரவுத்தேர்பவணியில் கலந்து கொள்கின்றேன், அன்னைய வளிடம் சிறப்பாக இரந்து மன்றாட எனக்கு எதுவுமே இல்லை, அன்னையவ ளுக்கு   நன்றி சொல்வதைவிட வேறு என்னதான் இருக்கு எனக்கு, மன்னார் மருதமடுவில் வீற்றிருக்கும் அன்னையவள் என்னை நிறைவாகவே ஆசீர்வ தித்துள்ளாள், குறையேதும் எனக்கில்லை, மரியன்னையே என்று கண்கல ங்கி பாடவேண்டும் போல இருந்தது, ஏனோ என் மனம் பாடுகின்றது, என்னையறியாமல் கண்ணத்தில் கண்ணிர்த்துளி உருண்டு ஓடுகின்றது!

என்னதான் நான்,நிறைவு பெற்றிருந்தாளும், அன்னையவளிடம் இன்னும் ஒரு உதவி கேட்டுவிடவேண்டும் போல இருந்தது,  என் அக்கா மகள் இளம் வயதில், விபத்தொன்றில் கணவனை பறிகொடுத்துவிட்டு, இராணுவ கெடு பிடிக்கு பயந்து, தன்மூன்று பிள்ளைகளையும் தவிக்கவிட்டு வெளி நாடு வர வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை, பிள்ளைகளை பிரிந்து வந்து, பனிரண்டு வருடங்களாகிவிட்டது, அந்தபிள்ளைகள் தாயோடு இணையவேண்டும்,  அதற்கு தாயாம் மருதமடு அன்னை அருள்பாலிக்க வேண்டும் என என் மனம் வேண்டிக்கொன்டே இருந்தது, அந்த இரவு வேளையில், வெண்குடைத்தேரில் பவணிவரும் அன்னை முகத்தை பார்க் கின்றேன். நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்!

நான் பார்த்தது சரசுவின் முகத்தை, அன்னைமுகவடிவில், சரசுவின் முகமா, என்னால் நம்பவே முடியவில்லை. கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் உற்று நோக்குகின்றேன். அதே சரசுவின் முகம் தான்! அந்த சரசு வைப்பற்றி நான் கொஞ்சம் உங்களுக்கு சொல்லவேண்டும். சரசு அவளை ப்பார்த்துவிட்டாளே போதும், நெஞ்சில் ஆசை தீயாக உரசிக்கொள்ளும், அவள் மீது என் ஊர்பசங்களுகெல்லாம் ஒரு கிறக்கம் தான், எனக்கும் கூடத்தான்! ஆனால் அவளை கல்யாணம் செய்துகொள்ள யாருமே துணி யவில்லை. 

அதற்கு காரனம் அவள் அம்மாசியின் மகள். அந்த காலத்தில், இப்போது இருக்கின்ற மாதிரி, குழிக்கழிவறைகள் இல்லை, வீட்டுக்கு வீடு  வாளிக் கழிவறைகள்தான். அதிகாலையில் இந்த அம்மாசிதான் வீடு வீடாக சென்று வாளிகளுக்குள் நிரம்பி வழியும் மலத்தை, தான் கொண்டுவரும் வாளிக்குள் திணித்துக்கொள்வான். வீடு வீடாக சென்று மலம் நீக்கும், இந்த அம்மாசி, ஒரு நாள் வராவிட்டால் போதும், ஊரவருக்கெல்லாம் மலச் சிக்கல் வேதனை வந்துவிடும். அம்மாசி பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் இருந்துவந்த ஒரு தலித்தமிழன். அவனை ஒரு தமிழனாக, ஏன் ஒரு மனித னாகக்கூட ஈழத்தமிழர் நினைத்தது இல்லை, இதிலே சரசுவின் வாழ்க்கை பற்றி சொல்லவே தேவை இல்லை. அம்மாசி தீண்டத்தகாதவன் ஆனல் அவன் மகள் சரசுவும் அவள் தேகமும் தீண்டத்தகாதவை அல்ல, காம சுகம் அளிக்கும் தேன் தடாகம் அவள்!

சரசுவை உரசிப்பார்க்காத ஊரவனே கிடையாது, எனக்கும் அவள் மீது சின்ன ஆசைதான்! அம்மாசியின் மனைவி முத்தம்மா வீட்டுக்கு, வீடு கூலி வேலை செய்பவள், என் வீட்டுக்கு அப்படித்தான் முத்தம்மா வந்து போவாள்,கூடவே சரசுவை கூட்டிவருவாள், சரசுவுக்கு அப்போது பனிரெ ண்டு வயசு இருக்கும், சரசு கறுப்பாக இருந்தாலும், வித்தியாசமான அழகு, மெட்டவிழத்துடிக்கும் மலர் போல, திமிறப்பார்க்கும் சின்ன மார்புகள், வகிடெடுத்த நெற்றி, அதிலே தள்ளாடும் சுருள் மயிர்கள், என்னவோ எனக்கு அவள் மீது ஒரு மயக்கம். அப்போது எனக்கு பதினெட்டு வயது இருக்கும், என் காதாலை வெளிக்காட்டவோ, எனது சமூகத்தை எதிர் க்கவோ எனக்கு திரணி இல்லாத சமயம். சரசுவின் மீது கொண்ட மோகம் கலைந்துபோன மேகமாகவே போய்விட்டது.

காலஓட்டத்தில் கரைகடந்து நானும் கனடா வந்தேன். என்னிடம் சொல்லா மலே என் வயதும் நாற்பதை தொட்டது. இமிகிரேசன், விசா நடவடிக்கை இப்படியாக காலமும் கரைந்தது, வயதும் கூடி, தலையில் மயிரும் நழுவி,,, கடைசியில் அம்மாவின் நச்சரிப்பு தாங்கமுடியாமல், கனடா கனவில், வாழ்ந்த ஒரு செல்வந்தனின் கடைசி மகள், இருபத்தி நான்கு வயது வசந்தாவை கல்யானம் செய்துகொள். எனச்சொல்லி, ஏஜன்சிக்கு காசு கொடுத்து கனடா அனுப்பிவைத்தனர். பொருந்தாத வாழ்க்கை, வந்தவள் இந்த வழுக்கை தலையைகண்டு, தன் வாழ்க்கை பயணத்தை மாற்றிக் கொண்டாள், புலம்பெயர் தமிழர் வாழ்வில் இது எல்லாம் சகஜமாகிப் போன ஓர் விடயம்.

இப்போது எனக்கு ஐம்பைத்தைந்து வயது, கையில் காசு இருக்கு, ஆனால் என் மனசுக்கு ஏற்ற ஒருத்தி இல்லையே,, இந்த நிலையில் தான் எனக்கு சரசுவின் ஞாபகம் தொற்றிக்கொண்டது. சரசுவின் நிலை முன்பு மாதிரி இல்லை, அவள் ஊருக்குள் பெரும் புள்ளி, காசு பணம் என எல்லாம் அவளி டம் இருந்தது, அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள் இப்போது அவளு க்கு வாடிக்கையாளர்கள். ஒரு முறை சரசுவை உரசிப்பார்க்க ஒரு இலட்சம் ரூபாவாம், அந்த அளவுக்கு ஊரவனிடம் வசதி இல்லை, அதனால் வெளியே இருந்து வருபவர்களுக்கு மட்டும் தான், சரசு விருந்து வைப்பதுண்டாம், இது ஊரவரின் நிறைவேறா ஏக்கம்.

எப்படியோ சரசுவை சந்திக்கவேண்டும்  என என் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவளுக்காக கனடாவில் இருந்து கையோடு கொண்டு வந்த அந்த ஜஸ்மின் வாசனை குப்பியை அழகான பரிசு பொட்டலமாக தயார் செய்து கொண்டு சரசுவின் வீடு நோக்கிப்போய்க்கொண்டிருந் தேன். அப்போது தான் அந்த சந்தர்ப்பம் நடந்தது, சரசுவோடு எப்படி எப்படி யெல்லாம் இன்பமாக இருக்காலம் என்று எண்ணியவண்ணம் நடந்து கொண்டிருந்தபோதுதான், வாசிகசாலை ஒழுங்கை வளவில் இருந்த யாகப்பரின் வீட்டுக்குள் இருந்து அந்த ஒப்பாரி சத்தமும் அழுகை ஓசை யும் கேட்டது, நான் உடனே அங்கே ஓடுகின்றேன், யாகப்பருக்கு இதயவலி, மனசன் பேச்சு மூச்சற்று வலியில் துடித்துக்கொண்டிருந்தார். உடனே  ஆட்டோவை வரவழைத்து, யாகப்பரை வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றேன். யாகப்பரை பரிசோதித்த டாக்டர், நல்ல காலம், இவரை இங்கே கொண்டு வந்தீர்கள், இவருக்கு உடனடியாக  இதய அறுவை செய்ய வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லிவிட்டார்.

யாகப்பர் பாவம் ஒரு விடுவலை தொழிலாளி, அவரை நம்பி ஐந்து பெண் பிள்ளைகள், என்னசெய்வதென்றே எனக்கு புரியவில்லை, "பரவாயில்லை டாக்டர், நீங்கள் ஆபரேசனுக்கு தாயர் செய்யுங்கள்", என சொல்லிவிட்டு, சரசுவுக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்துவிட்டேன், சரசுவின் மீது எனகிருந்த ஆசை அந்த நாள் மறைந்து போனது, ஆனாலும் சரசுவின் எண்ணம் என்னை சுற்றி சுற்றியே வந்தது. இரண்டு நாள் கழிந்திருக்கும், சரசுவை நான் எதேச்சையாக சந்தித்தேன், " என்ன தாஸ், எப்போ கனடா வில் இருந்து வந்தாய், என் நினைப்புக்கூட உனக்கு வரவில்லையே" என செல்லமாக கடிந்து கொண்டாள். "சரசு உனக்காக என் மனம் துடித்த துடி ப்பு அதை எப்படி சொல்வது எனத்தெரியாமல் நான் தவித்த தவிப்பு உனக்கென்ன தெரியும்" என என் மனம் எனக்குள்ளெ சொல்லிகொண்டது.

"என்ன தேவா ஏதோ நினைப்பில் ஆழ்ந்துவிட்டாய்!" என சரசு என் கையை பிடித்து உலுப்பிய போதுதான் நான் சட்டென்று சுதாகரித்துக்கொண்டேன். நான் சரசை சந்திக்க வந்தவிடயம், யாகப்பர் வீட்டில் நடந்தவை எல்லாவற் றையும், ஒன்றும்விடாமல் ஒப்புவித்தேன். "என்ன தேவா, நான் உடலை விற்கும் ஒரு பாலியல் தொழிலாளி தான், ஆனாலும் என் தேவாவை நான் அறிவேன். உன் சின்ன வயசு காதலையும் நான் அறிவேன், இந்த சாதி சமூக கட்டமைப்பை தகர்க்க புலிகளால் கூட முடியாது போன போது, நீ எல்லாம் எம்மாத்திரம். என் தலைவிதி, நான் இந்தியாவில் இருந்து வந்த கள்ளத்தோனி, கப்பலுகெல்லாம் ஆசைப்படலாமா" சரசு சொன்னபோது, நான் ஆடிப்போனேன். " இப்ப நீ என் கூட வீட்டுக்கு வருகின்றாய். என் வீட்டில் தான் தங்கவேண்டும், அடம்பிடித்தாள் சரசு!

சரசுவின் வீட்டு வாழ்க்கை எனக்கு ஆனந்த பூங்காவாக மனசுக்கு பிடித்துப் போனது, இதைவிட ஆச்சரியம், சரசுவின் நடவடிக்கை தான், என்னை அசத்தியது, நான் செக்சைப்பற்றி சொல்லவில்லை, அவளது மனசு, இரக்க சுபாவம் எல்லாமே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரசுவை தேடி, ஏழை எளிய சனங்கள் வந்துபோவார்கள், கடனாக உதவியாக எல்லோருக்கும் கொடுத்து உதவுவாள். ஒரு நாள், நான் அவளிடம் கேட்டேன்." ஏன் சரசு இப்படி உதவிகேட்டு வருபவர்க்கெல்லாம் இல்லை என சொல்லாமல், கொடுக்கின்றாயே, உனக்கென நீ எதையும் சேர்த்துவைக்கவில்லையா" அப்போது சரசு சொன்னதுதான் எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருந்தது." தேவா நாய் விற்ற காசு குரைக்காது, நான் என் உடலை விற்று பிழைக்கும், இந்த பணத்தாலே, என் சமூகத்தை சார்ந்தவர்களை என்னால் உயர்த்திவிட முடியாது. நாங்கள் என்றென்றும் தாழ்ந்த சாதிதான், கள்ளத் தோனி இந்தியர் தான். உடலை விற்று நான் சேர்க்கும் இந்தப்பணம், புண்ணியம் சேர்க்கட்டும். எனக்குத்தான் இனி தேவா இருக்கின்றானே" எனச்சொல்லி ஒரு குறும்புப்பார்வை பார்த்தாள் சரசு!

சரசு சொன்ன அந்த வார்த்தையும், அவள் வீசிய அந்த பார்வையும், எனக்கு கிளர்ச்சியை அளிக்கவில்லை மாறாக என் சிந்தனைகளை தூண்டியது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் செத்து மடிந்தோம், இந்தியா போரை நடத்தியது, தமிழகம் வேடிக்கை பார்த்தது என கொக்கரிக்கும் ஈழத்தமிழ்த் தேசியம், இந்த தமிழகத்து இந்திய தமிழர்களை அடிமைகள் போல நடத்தி, பொருளாதார, காமச்சுரண்டல்களுக்கு அவர்களை உட்படு த்தி, கள்ளத்தோணிகள் என்று சொல்லி, அரசாங்கத்துக்கு காட்டிக்கொடு த்து, அவர்களை நாடு கடத்திய கொடுமைகள் என் மனதில் அலை அலை யாக வந்து மோதியது. சரசு எனக்கு இப்போது அருள்பாலிக்கும் அன்னை யாக காட்சிதருகின்றாள்,,,,,,, மடு அன்னை முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன். அன்னை முகமும், சரசு முகமும் வந்து வந்து போகின்றது! சரசு இப்போது என் உள்ளத்தில் முழுவதுமாக குடி புகுந்தாள்!  ( யாவும் கற்பனையே)   பேசாலைதாஸ்.

பிற்குறிப்பு: 27 ஆகஸ்ட் ஞாயிறு. நோர்வே, பேர்கன் நகரில் அன்னையின் ஆரோகன திருவிழாவில் அன்னையின் திருச்சுரூபபவணியில் அன்னை முகத்தை பார்த்தவேளையில், என் சிந்தனையில் உதித்த கரு, கதையானது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...