பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

அகம்பாவத்தின் விளையாட்டு

 அகம்பாவத்தின் விளையாட்டு

1.இரண்டு வெள்ளை எலிகள் பரிசோதனை சாலையின் கூண்டு கம்பிகளுக்கிடையே பேசிக் கொண்டன. “எப்படி டாக்டர் ஸ்மித்துடன் உன் பழக்கம் போய்க் கொண்டிருக்கிறது, சொல்?” என்று முதல் எலி கேட்டது.

இரண்டாவது, “மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. சிறிது காலம் பிடித்தாலும் இறுதியில் நான் அவனை தயார் செய்து விட்டேன். இப்போது நான் எப்போது மணியடித்தாலும் உடனே அவன் எனது உணவை கொண்டு வருகிறான்” என்றது.

இது மிகவும் வினேதமான உலகம். மனோஉளவியலாளர் டாக்டர் ஸ்மித் தான் எலிகளை பழக்கப்படுத்த செய்வதாக அவர் நினைத்துக் கொண்டிருக்க, எலிகள் தாங்கள் அவரை பழக்கப்படுத்துவதாக நினைத்துக் கொள்கின்றன.

2.மனைவி தன் கணவனை பழக்கப்படுத்துவதாக நினைத்துக் கொள்கிறாள். எல்லா மனைவிகளும் தங்களது வாழ்க்கை முழுவதும் தங்களது கணவனை பழக்கப்படுத்துகிறார்கள். கணவன்கள் மனைவிகளை பழக்கப்படுத்துகிறார்கள். இது வாழ்க்கை என்பது பழக்கப்படுத்துவதும் பழக்கப்படுவதுமாகவே இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அகம்பாவத்தின் விளையாட்டு

 அகம்பாவத்தின் விளையாட்டு 1.இரண்டு வெள்ளை எலிகள் பரிசோதனை சாலையின் கூண்டு கம்பிகளுக்கிடையே பேசிக் கொண்டன. “எப்படி டாக்டர் ஸ்மித்துடன் உன் பழ...