Followers

Sunday, 8 January 2023

 டிக் டிக் டிக் ,,,,,,, பேசாலைதாஸ் 


நஸுருதீன் தன்னுடைய கை கடிகாரத்தை பழைய பொருட்கள் போட்டு வைக்கும் ஒரு இருட்டு அறைக்குள் தொலைத்துவிட்டார்.அது விலை மதிப்பு மிக்கது.

பலர் அதை எடுக்க முயற்சி செய்தார்கள் முடியவில்லை.இறுதியில் ஒரு சிறுவன் வந்தான் நான் எடுத்து தருகிறேன் என்று.முல்லா அனுமதித்தார்.

உள்ளே சென்ற அடுத்த நிமிடம் எடுத்து வந்துவிட்டான்.

முல்லா கேட்டார் இவ்வளவு பேர் முயற்சித்து முடியவில்லை உன்னால் எப்படி?அவன் சொன்னான் எல்லோரும் தேடுகிறேன் என்று இரைச்சலை உருவாக்கினார்கள்.

நான் சென்று அமைதியாக வெறுமனே கவனித்தேன்.எதையும் நகர்த்தவில்லை, தேடவில்லை.

கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் மெதுவாக கேட்டது.அதைவைத்து எடுத்து வந்துவிட்டேன்.

தியானமும் அப்படித்தான்.

தியானம் உங்களுக்கு ஏன் சிரமமானதாக உள்ளது.மனம் என்னும் குரங்கை அடக்க முயற்சிப்பதால்,அதனுடன் போராடுவதால்.

மனம் ஒரு குரங்கு.நான் டார்வின் தத்துவத்தைப்பற்றி பேசவில்லை.பரினாம வளர்ச்சி பற்றியோ,மனிதனின் உடல் அமைப்போ பற்றி அல்ல.

இது மனம் சம்பந்தப்பட்டது.குரங்கு எதாவது செய்துகொண்டேயிருக்கும்.அதை அமைதியாக ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது.

உங்கள் மனமும் அப்படித்தான்.தியானத்தில் குரங்கை நீங்கள் அடக்க முயற்சித்தால்,அமைதிப்படுத்த முயற்சித்தால் ஒரு போதும் தியானத்தில் உண்மை தன்மையை அடையவே முடியாது.

எனவே முதலில் குரங்கை கவனியுங்கள்.வெறுமனே கவனியுங்கள்.பிறகு கவனிப்பவன் யார் என கவனியுங்கள்.

கவனிப்பவன் கவனிக்கப்படும்போது குரங்கு அங்கு இருக்காது.

அவ்வளவுதான் நீங்கள் உண்மையை நெருங்கிவிட்டீர்கள்.ஏனென்றால் மனக்குரங்கு இயங்குவதே உங்கள் கவனிப்பு தன்மையால்தான்.

பிறகு குரங்கு வரும் போகும் கவனியுங்கள். அதன் பின்னால் போய்விடாமல் கவனியுங்கள்.பின்பு கவனிப்பவனை கவனியுங்கள்.

என்றாவது ஒரு நாள் குரங்கு முழுவதும் கானாமல் போய்விடும்.

நீங்கள் முழுமையான தியானத்தில் இருப்பீர்கள்.

No comments:

Post a Comment

 எங்கே நீயோ நானும் அங்கே உன்னொடு,,,,, பேசாலைதாஸ் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகம...