Followers

Sunday 8 January 2023

சம்சாரம் கேட்ட கேள்வி

 சம்சாரம் கேட்ட கேள்வி பேசாலைதாஸ் 


புத்தர் ஞானம் அடைந்தபின் தன் சொந்த ஊர் திரும்பி மனைவியை 
சந்தித்தது பற்றி நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம். 

அதில் ஒரு வெர்சனில் புத்தர் தானே தன் மனைவியையும், மகனையும் சந்திக்கவேண்டும் என சொல்லி கிளம்புகிறார். அவருடன் இருந்த பிட்சுக்கள் "அனைத்தையும் துறந்துவிட்டு வந்தீர்கள். ஏன் மறுபடி போய் மனைவியை சந்திக்கவேண்டும்" என கேட்கிறார்கள். "பழைய வாழ்க்கையின் கடன். அவளிடம் சொல்லாமல், குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அதற்கு போய் சமாதானம் சொல்லவேண்டும்" என்கிறார் புத்தர்.

புத்தர் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார் யசோதரா. புத்தருக்காகவும், அவரது சீடர்களுக்காகவும் புத்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மண்டபத்தை கட்டியும் அங்கே அவள் போகவில்லை. "எந்த அறையில் என்னை இரவு தூங்குகையில் சொல்லாமல், கொள்ளாமல் தனியே விட்டுவிட்டு போனாரோ, அங்கேயே அவர் வந்து சந்திக்கவேண்டும்" என்கிறார்.

புத்தரும் அதே அறையில் சென்று யசோதராவை தனிமையில் சந்திக்கிறார். யசோதரா ஒரே கேள்வி தான் கேட்கிறார்.

"நீங்கள் இப்போது என்னவாக வந்து என் முன் நிற்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை. மகான் என்கிறார்கள், கடவுள் என்கிறார்கள். உங்கள் உபதேசங்களை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்துங்கள். நீங்கள் வீட்டை விட்டு எங்கோ காட்டுக்கு சென்று அடைந்த அந்த ஞானத்தை, அறிவை, சாதகத்தை இதே அரண்மனையில் வசித்தபடி அடைந்திருக்கமுடியாதா? மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு காட்டுக்கு போயிருந்தால் மட்டுமே அந்த ஞானம் கிடைத்திருக்குமா?"

பதில் சொல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார் புத்தர். ஞானிக்கு காடும், அரண்மனையும் ஒன்றுதான் என்பதை இப்போதைய புத்த நிலையில் அவரால் உணரமுடிந்தது. ஆனால் அன்று இளவரசன் நிலையில் அதை அவரால் உணரமுடியவில்லை.

But moral of the story is -> எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் சம்சாரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடிதான் நிக்கணும்

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...