நன்றே செய் அதை இன்றே செய்!
அன்பர்களே! வாழ்க்கையின் மிக முக்கியமான படிப்பினை என்ன..? உன்னால் செய்ய முடி ந்ததை நீ செய். இந்த உலக த்தையே உன்னுடையதாக நீ வரித்துக்கொண்டுவிட்டால், அதன்பின் எல்லாமே உன்னு டையதுதானே..? ‘இதை நான் செய்ய வேண்டும். இதை நான் செய்யக்கூடாது..’ என்று பாகு படுத்திப் பார்ப்பதைவிட, ‘இதை என்னால் செய்ய முடியும். இதை என்னால் செய்ய முடி யாது..’ என்று பாகுபடுத்திப் பார்ப்பது எவ்வளவோ மேல். உங்கள் உயிரின் முழுவீச்சையும் நீங்கள் உணர வேண்டும் என்றால், முதலில் எதையும், ‘இது என்னுடையது, இது என்னுடையதில்லை’ என்று சுருக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கை படுமோசமாக மாறி விடும். ‘இது என் குடும்பம். இது என் மனைவி. இது என் தாய். இது என் வீடு. இது என் தெரு..’ என்று எதனுடனாவது உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது, ‘இதைச் செய்வேன், இதைச் செய்ய மாட்டேன்’ என்ற தீர்மானங்களுக்கு வருகிறீர்கள். ‘என் குழந்தைக்கு அடிபட்டால் நான் ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும். வேறெந்தக் குழந்தைக்கோ அடிபட்டால், நான் எத ற்குப் போக வேண்டும்..?’ என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள். யாரும் இந்த உலகில் உங்களுக்குச் சொந்தமில்லை. நீங்கள் இந்த உலகில் வந்தது போலவே, அவர்களும் வந்து சேர்ந்தார்கள், அவ்வளவுதான். இப்போது ஒரு சின்ன சம்பவத்தை உங்கள் மனக்கண் முன்னே, நிறுத்துகின்றேன்.
அது ஒரு பிச்சைக்காரர்கள் தங்கும் ஆலமரம். அங்கே ஒரு பிச்சைக்காரன் சுள்ளிகளைப் பொறுக்கி வந்து அடுப்பு மூட்டி தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார். “யாரு க்காகத் தயாரிக்கிறீர்கள்..?” என்று கேட்டான் இன்னொரு பிச்சை க்காரன். “அதோ அங்கே சோம்பலாக உட்கார்ந்திருக்கிறானே, அவனுக்காகத்தான்..” மரத்தடியில் மற்ற பிச்சைக்க்ரர்கள் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பிச்சைக்காரன் மட்டும் எப்போதும் வேலைகளைத் தவிர்த்துக்கொண்டு சோம்ப லாகவே உட்கார்ந்திருப்பான். “அவனுக்கு நீங்கள் எதற்கு தயாரி த்துத் தரவேண்டும்..? வளர்ந்துவிட்டான். அவனே தனக்குத் தேவையான டீயைத் தயாரித்துக்கொள்ளட்டுமே..!” என்றான் அந்த பிச்சைக்காரன். அதற்கு தேனீர் தயாரித்த பிச்சைக்காரன் புன்னகைத்தார். “இப்போது இங்கே நான் இருக்கிறேன்..” என்றார்.
அன்பர்களே தேனீர் தயாரித்த பிச்சைக்காரன் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? நல்ல காரியம் அதை அடுத்த வனுக்கு செய்யும் போது, நீ செய்தால் என்ன? நான் செய்தால் என்ன? என்ற குழுப்பம் எதற்கு? முதலில் நாம் செய்வோம் என்று அந்த பிச்சைக்காரன் நினைத்திருப்பான், என நான் நினைக்கி ன்றேன். நான் நினைத்தது சரிதானே! என் பேசாலை உறவுகளே நல்லதை நினைபோம் அதை இன்றே செய்வோம். என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக