பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

0413 வாய்விட்டு சிரியுங்கள்!

வாய்விட்டு சிரியுங்கள்!


அன்பர்களே! சிரிக்க, சிந்திக்க தெரிந்த ஜீவராசி மனிதன் ஒருவனே! ஆனால் அதனை அவன் சரியாக செய்வதில்லை. மனம் விட்டு சிரிக்க மனிதர்களுக்கு தெரி யாது! அப்படி சிரித்து விட்டாலும் அடுத்த வன் வயிற்றெரிச்சல்படுமளவுக்கு சிரி ப்பான் அல்லது அடுத்தவன் வீழ்ச்சியை பார்த்து சிரிப்பான் இப்படிப்பட்ட சிரி ப்பால் ஆன்மா சந்தோசம் அடைவதில்லை. எனெவேதான் நான் சொல்கின்றேன் இன்று முதல் வாய் விட்டு மனதால் சிரியுங்கள் உங்கள் மன நோய் உங்களவிட்டு அகலும். சிரிப்பைத் தொலைப்பதற்கு ஆயி ரம் காரணங்கள் சொல்லலாம். அப்பாவைத் தொலைத்தேன்.., அம்மாவைத் தொலைத்தேன்.., மனைவியைத் தொலைத்தேன்.., கணவனைத் தொலைத்தேன்.., குழந்தையைத் தொலைத்தேன்.. என்று என்ன காரணம் சொன்னாலும், சிரிப்பைத் தொலைக்க வேண்டிய அவசியமே இல்லை. சிரிப்பைத் தொலைத்தார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம், அவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதுதான். வாழ்க்கையைப் பற்றிய உண்மையான உணர்வை அவர்கள் தொலைத்துவிட்டா ர்கள் என்பதுதான் காரணம். வாழ்க்கையின் எந்தக் கட்டத்தி லும், எந்தச் சூழ்நிலையிலும் வருவதை எப்படி எதிர்கொள்கி றீர்கள் என்பது நீங்கள் எவ்வளவு அறியாமையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. இந்த உலகில் வறுமையை விட, நோயைவிட, மற்ற எந்தக் குறைபாட்டையும்விட அதிகமா கப் பரவியிருப்பது அறியாமைதான். அந்த அறியாமையைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியவில்லை என்றால், சிரிப்பதற்கு வேறு என்ன வாய்ப்பிருக்கிறது..?

                                  ஒரு  மடம்  அங்கே   குருவிடம் கற்க வந்த பல மாணாக்கர்களில் புதிதா கச் சேர்ந்த மாணவன் எப்போதுமே சுறு சுறுப்பாக இருப்பான். வேலைகளை இழு த்துப் போட்டுக்கொண்டு செய்வான். குரு அழைத்தால், மற்றவர்களை முந்திக்கொ ண்டு போய் நிற்பான். அவர் இட்ட வேலையை உடனடியாகச் செய்து முடிப்பான். எல்லோரும் உறங்கியபின்தான் உறங்கச் செல்வான். காலையில் முதல் மனிதனாக எழுந்து வேலை களைத் துவங்குவான்.  அவனை கவனித்துக்கொண்டிருந்த குரு, அருகில் அழைத்தார். “இதற்கு முன்னால் நீ எங்கிருந்தாய்..?” என்று கேட்டார். “சாலிங் கியூவிடம் பயின்றேன்..” என்றான் அவன். “ஓ..! சாலிங் க்யூ..! அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிரு க்கிறேன்.. ஒரு பாலத்தில் நடக்கும்போது, கால் வழுக்கி தண்ணீ ரில் விழுந்தாரே, அவர்தானே..?” “ஆமாம் குரு..” “அந்த நிமிடமே அவர் ஞானம் வென்றார் என்று உனக்குத் தெரியுமா..?” “தெரி யாது.. ஆனால், அவர் அதைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கி றார்..” “அந்தக் கவிதை உனக்கு ஞாபகம் இருக்கிறதா..?” “இரு க்கிறது குரு..” “எங்கே சொல்..!” “எனக்கு ஒரு முத்து கிடைத்தி ருக்கிறது. வெகு காலமாகக் குப்பையும், அழுக்கும் அதன் பிரகாசத்தை மூடியிருந்தன. இன்று தூசு பறந்துவிட்டது. குப்பை அகன்றுவிட்டது. பிரகாசம் பிறந்துவிட்டது. அந்த ஒளியில் நதிகளும், மலைகளும் வெளிச்சமிடப்பட்டுவிட்டன..!” கவிதையை அவன் சொல்லி முடித்ததும், குரு வாய்விட்டுப் பெரிதாக சிரித்தார். மாணாக்கன் குழம்பினான். இந்தக் கவிதையில் என்ன வேடிக்கை இருக்கிறது..? எதற்காக குரு சிரித்தார்..? என்று யோசித்து, யோசித்துப் பார்த்தான். விடை கிடைக்கவில்லை. அன்றிரவு அவனுக்குத் தூக்கமே கெட்டுப் போயிற்று. மறுநாள் காலையில் எழுந்ததும், குருவை நாடி வந்தான். “குருவே, நேற்று நான் அந்தக் கவிதையைச் சொன்னதும், எதற்காக அப்படி பொங்கிச் சிரித்தீர்கள்..?” “நீ ஒரு கோமாளியைவிட மோசமானவன்..” என்றார் குரு. “என்ன..?” “ஆமாம்.. கோமாளிகள் மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள். ஆனால், நீயோ மற்றவர்கள் சிரித்தால், அச்சம் கொள்கிறாய்..” என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவர் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார். குருவின் அந்தச் சிரிப்பு அந்த மாணாக்கனுக்கு ஞானம் வழங்கியது. உங்களுக்கு ஞானம் இருந்தால் சிரியுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...