பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

0415 உறவு என்ற குழப்பம்!

உறவு என்ற குழப்பம்!
அன்பர்களே! குரங்காய் இரு ந்த மனிதன் மனதில் குழப்பம் எதுவும்  இல்லை, குடும்பம், மனைவி, அண்ணன் தம்பி கூட்டம் எதுவும் இல்லை, ஆசை பாசம் காதலில் வீழ்ந்தான் அமைதியை காணவில்லை, அலைந்தான் அழுதான் துடி த்தான் மாண்டான் இறுதியில் யாருக்குமே லாபம் இல்லை. உறவுகள் எல்லாம் நாமே நமக்கு போட்டுக்கொண்ட வட்டங்கள். திருமணமானால்,  ‘இவள் என் மனைவி!’ என்கிறீர்கள். விவாகரத்து ஆனால், ‘இவள் என் மனைவி அல்ல!’ என்கிறீர்கள். இரண்டுமே நீங்களாக பூட்டிக்கொ ண்ட உறவுமுறைதான். திருமணம் ஆகி, இவள் என்னுடையவள் என்று சொந்தம் கொண்டாடத் துவங்கியதும், அதற்கேற்றா ற்போல், உணர்வுகள், உணர்ச்சிகள், பாசம் எல்லாம் பிறக்கி ன்றன. எப்போது நிராகரிக்கிறீர்களோ, அப்போதே அந்த உணர்வுகள் மாறி, எரிச்சல், கோபம், வெறுப்பு என்ற உணர்வுகள் பிறக்கின்றன. இப்படி எதையாவது சொந்தம் கொண்டாடு ம்போது, அதனுடன் சேர்ந்து உணர்வுகள் பிறப்பது மிகவும் பாரப ட்சமான செயலாக மாறிவிடும். உங்களுடைய முழுமையான திறமையை ஒருபோதும் அது வெளிக்கொணராது. அன்பர்களே எனக்குள் முளைத்த எண்ணப்பிரதிபலிப்பை கதை உருவில் தருகின்றேன்.
                                      தாஸும்,  ர‌தியும் காதலர்கள். ஆனால், தாஸ் ஒரு ஏழை, ரதி நடுத்தர வர்க்கம்.  வெவ்வேறு பொருளாதர மட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்வ தற்கு அவர்களுடைய குடும்பங்களோ, அவர்களைச் சேர்ந்த இன மோ ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. “சேர்ந்து வாழ முடியாத போது, எதற்காக இந்த வாழ்க்கை..? நாம் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம் வா..!” என்று தாஸ் சொன்னான். இருவரு மாக மலை உச்சிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். கைகளைக் கோத்துக்கொண்டார்கள். குதிக்க இருந்த கடைசித் தருணத்தில், ரதி சென்னாள் , “தாஸ், எனக்கு பயமாக இருக்கிறது. முதலில் நீ குதி..! அதைப் பார்த்து நான் தைரியம் பெறுகிறேன்!” என்று கூறி னாள். தாஸ், “ஐ லவ் யூ ர‌தி..!” என்றான். சட்டென்று விளிம்பிலிரு ந்து குதித்துவிட்டான். யாரும் எட்ட முடியாத பள்ளத்தில் போய் தாஸ் விழுந்ததை  ர‌தி பார்த்தாள். அவளும் குதிப்பதற்காகத் தயாரானாள். கடைசித் தருணத்தில், ‘இப்போது தாஸ்ஸே  இல்லை. தாஸ் இல்லை என்றால், என் காதல் இல்லை. காதல் இல்லை என்றால், . குடும்பப் பிரச்சினை இல்லை. சமூகப் பிரச்சி னை இல்லை.. பிரச்சினையே இல்லாதபோது, நான் எதற்கு என் உயிரை விடவேண்டும்..?’ என்று அவளுக்குத் தோன்றியது. கீழே பள்ளத்தைப் பார்த்து, “தாஸ், ஐ லவ் யூ..!” என்று ஒருமுறை கத்தி விட்டு, வீட்டைப் பார்த்துத் திரும்பி நடந்தாள். என் கற்பனையில் எழுந்த சம்பவம் இது. 
                                                                                         பார்த்தீர்களா அன்பர்களே!   என்னுடையது, என்னுடையவன் என்று நினைக்கும்போது அதை ஒட்டிய செயல்கள் இப்படித்தான் இருக்கும். எனவே எதிலும் நாம் அதீத பற்று வைக்கக்கூடாது. அது நம்மை துன்பத்தில் தள்ளிவி டும்! பற்றுக!  பற்றற்று என்று வள்ளுவன் சொன்னது இதுதான்! அன்பர்களே எதை பற்றிப்பிடிக்கப்போகின்றீர்கள்? அன்புடன் என்றும் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...