wisdom by Pesalaithas
Once, a student approached Rumi and asked, How should I deal with the pain and suffering in life?"
wisdom by Pesalaithas
true love is,,,,,,? by Pesalaithas
எமனாயிருந்தாலும், எவனாயிருந்தாலும், பேசாலைதாஸ்
எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!
அவள் மானுடப் பெண் என்றாலும் ,
அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன்.
அவர் மணந்த பெண் நல்லவள் தான்.
என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.
மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார்.
ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,
மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.
மகனே..
நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.
மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.
எப்படித் தெரியுமா...?
ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன்.
உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.
நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே.
நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.
எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,
தைரியமாக மருந்து கொடு.
அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.
அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.
மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,
மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்.
அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.
ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,
எதிரில் அப்பாவை (எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.
இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்.
யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.
இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,
அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,
ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.
அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.
எமன் (அப்பா) நின்று கொண்டிருந்தார்.
வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.
ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,
ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.
இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.
எப்படி அவரை விரட்டுவது..?
பளிச்சென்று யோசனை பிறந்தது.
வாசல் பக்கம் பார்த்து கத்தினான்.
அம்மா....!!
அப்பா உள்ளே இருக்கார்.
ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!
இங்கே தான் இருக்கார்..அம்மா ...!
என்று அலறினான்....!
அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!
கட்டுனது எமனாயிருந்தாலும்,
இல்லை எவனாயிருந்தாலும்,
பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் சிங்கம் அழுவதைக் கண்டது, சிங்கம் "நான் உன்னை கொன்று சாப்பிட மாட்டேன்" என்று உறுதியளித்து., ஆட்டிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியது,
ஆனால், செம்மறி ஆடு மறுத்துவிட்டது. சிங்கம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகு, அதன் வார்த்தையை நம்பி செம்மறி ஆடு சிங்கத்தின் கூண்டைத் திறந்தது.
சிங்கம் உணவு இல்லாமல் பல நாட்கள் கூண்டில் இருந்ததால் மிகவும் பசியுடன் இருந்தது.
அது செம்மறி ஆட்டை கொன்று சாப்பிடுவதற்காக எட்டிப் பிடித்தது, ஆனால், செம்மறி ஆடு சிங்கத்தின் வாக்குறுதியை நினைவுபடுத்தியது. மற்ற விலங்குகள் அவ்வழியாக கடந்து போகையில், சிங்கம் மற்றும் ஆட்டின் வாக்குவாதத்தை பார்த்து என்ன நடந்தது என்பதை அறிய முற்பட்டன.
சிங்கமும், செம்மறி ஆடும் என்ன? நடந்தது என்பதை விவரித்தன.
ஆனால், சிங்கத்தின் மேல் உள்ள பயத்தால் மற்ற விலங்குகள், நாங்கள் ஏதும் சொல்ல முடியாது என்று நழுவின. ஆனால், ஆமையைத் தவிர அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பக்கம் சாய்ந்தன. ஆமை மட்டும் ஆட்டை காப்பற்ற முற்பட்டது.
அப்போது ஆமை சிங்கத்திடம், செம்மறி ஆடு உன்னைக் காப்பாற்றுவதற்கு முன்பு, நீ இருந்த இடத்தைக் காட்டு என்று கேட்டது. சிங்கம் அந்த கூண்டைக் காட்டியது. ஆமை கேட்டது, ஆடு வந்தபோது நீ உள்ளே இருந்தாயா? வெளியில் இருந்தாயா? என்று கேட்டது.
சிங்கம் தான் உள்ளே இருந்ததாகச் சொன்னது. ஆமையோ "சரி, உள்ளே நுழையுங்கள், உண்மையில் சிரமத்தில் இருந்தீர்களா? என்று பார்ப்போம்" என்றது. சிங்கம் உள்ளே நுழைந்தது.. அடுத்த கணம் ஆமை சிங்கத்தின் கூண்டைப் பூட்டியது.
ஆச்சரியத்துடன், மற்ற விலங்குகள் ஆமையிடம் "ஏன் இப்படி செய்தாய்?என்று கேட்டன.
அதற்கு ஆமை "இன்று இந்த ஆட்டை காப்பாற்றாமல் சாப்பிட அனுமதித்தால், நாளையும் சிங்கம் பசியுடன் இருக்கும். நாளை நம்மில் ஒருவரை சாப்பிடும் என்று ஏன்?உங்களுக்கு புரியவில்லை.
இன்று அவனுக்குத்தானே பிரச்னை என்று கடந்து சென்றால், அது.. விரைவில் உங்களிடம் வரும்.
"மற்றவர்களை ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றினால், நாளை நாமும் காப்பற்றப்படுவோம்". இது இயற்கையின் நியதி என்றது ஆமை.
ஆம்.. நட்புகளே!
இன்று நீங்கள் தீமையை ஆதரிக்காதீர்கள்,. ஏனென்றால், இன்று..
அது உங்களை நேரடியாக பாதிக்காது, ஆனால், நாளை அது உங்களிடம் வரலாம்.
நடைபாதை பேசாலைதாஸ்
ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார்.
ரொம்ப எளிமையான மனிதர்.
தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை.
சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார்.
அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார்.
வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை.
தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை.
மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.
இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை.
அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார்.
இவர் அதை மறுத்து விட்டார்.
சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
அவர் அதுவும் வேண்டாம் என்றார்.
சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார்.
தேவையில்லை என்றார் இவர்.
நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன்.
அதுவும் வேண்டாம் என்றார்.
நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன்.
மக்கள் தொண்டுக்கு ஊதியம் எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார்.
முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார்.
ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார்.
அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார்.
அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார்.
இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது.
அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார்.
நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
இது நடைபாதை.
இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன்.
இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது.
சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம்.
பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள்.
இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள்.
நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது.
நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார்.
அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள்.
நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர்.
ஐயா வணக்கம்!
எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம்.
ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள்.
பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள்.
அதற்கு நீதிபதி இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும்.
எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை.
நீங்கள் சொல்லுங்கள் என்றார்.
சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள்.
என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி.
நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள்.
அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள்.
உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார் நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள்.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்...