பின் தொடர்பவர்கள்

புதன், 29 நவம்பர், 2023

நீண்ட காலத்திற்கு முன்பு, விலங்குகளின் ராஜ்ஜியத்தில், ஒரு செம்மறி ஆடு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கூண்டுக்குள் சிங்கம் அழுவதைக் கண்டது, சிங்கம் "நான் உன்னை கொன்று சாப்பிட மாட்டேன்" என்று உறுதியளித்து., ஆட்டிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியது,

ஆனால், செம்மறி ஆடு மறுத்துவிட்டது. சிங்கம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகு, அதன் வார்த்தையை நம்பி செம்மறி ஆடு சிங்கத்தின் கூண்டைத் திறந்தது.

சிங்கம் உணவு இல்லாமல் பல நாட்கள் கூண்டில் இருந்ததால் மிகவும் பசியுடன் இருந்தது. 

அது செம்மறி ஆட்டை கொன்று சாப்பிடுவதற்காக  எட்டிப் பிடித்தது, ஆனால், செம்மறி ஆடு சிங்கத்தின் வாக்குறுதியை நினைவுபடுத்தியது. மற்ற விலங்குகள் அவ்வழியாக கடந்து போகையில், சிங்கம் மற்றும் ஆட்டின் வாக்குவாதத்தை பார்த்து என்ன நடந்தது என்பதை அறிய முற்பட்டன. 

சிங்கமும், செம்மறி ஆடும் என்ன? நடந்தது என்பதை விவரித்தன.

ஆனால், சிங்கத்தின் மேல் உள்ள பயத்தால் மற்ற விலங்குகள், நாங்கள் ஏதும் சொல்ல முடியாது என்று நழுவின.  ஆனால், ஆமையைத் தவிர அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பக்கம் சாய்ந்தன. ஆமை மட்டும் ஆட்டை காப்பற்ற முற்பட்டது.

அப்போது ஆமை சிங்கத்திடம், செம்மறி ஆடு உன்னைக் காப்பாற்றுவதற்கு முன்பு, நீ இருந்த இடத்தைக் காட்டு என்று கேட்டது. சிங்கம் அந்த கூண்டைக் காட்டியது. ஆமை கேட்டது,  ஆடு வந்தபோது நீ உள்ளே இருந்தாயா? வெளியில் இருந்தாயா? என்று கேட்டது.  

சிங்கம் தான் உள்ளே இருந்ததாகச் சொன்னது. ஆமையோ "சரி, உள்ளே நுழையுங்கள், உண்மையில் சிரமத்தில் இருந்தீர்களா?  என்று பார்ப்போம்" என்றது. சிங்கம் உள்ளே நுழைந்தது.. அடுத்த கணம் ஆமை சிங்கத்தின் கூண்டைப் பூட்டியது.

ஆச்சரியத்துடன், மற்ற விலங்குகள் ஆமையிடம் "ஏன் இப்படி செய்தாய்?என்று கேட்டன.

அதற்கு ஆமை  "இன்று இந்த ஆட்டை காப்பாற்றாமல் சாப்பிட அனுமதித்தால்,  நாளையும் சிங்கம் பசியுடன் இருக்கும். நாளை நம்மில் ஒருவரை சாப்பிடும் என்று ஏன்?உங்களுக்கு புரியவில்லை.

இன்று அவனுக்குத்தானே பிரச்னை என்று கடந்து சென்றால், அது.. விரைவில் உங்களிடம் வரும். 

"மற்றவர்களை ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றினால், நாளை நாமும் காப்பற்றப்படுவோம்". இது இயற்கையின் நியதி என்றது ஆமை.

ஆம்.. நட்புகளே!

இன்று நீங்கள் தீமையை ஆதரிக்காதீர்கள்,. ஏனென்றால், இன்று..

அது உங்களை நேரடியாக பாதிக்காது, ஆனால், நாளை அது உங்களிடம் வரலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...