வெருளி பேசாலைதாஸ்
ஒரு நாள் நான் ஒரு சோளக் கொல்லை பொம்மையைப் பார்த்து, ' உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை.உன்னைக் கண்டு, அதிக விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மழையிலும், வெயிலிலும், கொளுத்தும் கோடையிலும், நடுக்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? ' என்று கேட்டேன்."
அதற்கு அந்தப் போலி மனித பொம்மை கூறியது : "உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. மழை, வெயில், வெப்பம், குளிர் இவற்றில் கஷ்டப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. என்னைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன.ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது."
நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் இந்தப் போலி மனிதனைப் போல இருக்க விரும்புகிறீர்களா?
உள்ளே ஒன்றுமில்லாமல், ஒருவரை பயமுறுத்திக் கொண்டு, மற்றொருவரை மகிழ்வித்துக் கொண்டு, மற்றும் ஒருவரை அவமதித்துக் கொண்டு, மற்றொருவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?
உங்ளது வாழ்க்கை பிறருக்காகத்தானா?
எப்போதாவது நீங்கள் உள்ளே பார்ப்பீர்களா?
வீட்டிற்குள் யாராவது இருக்கிறார்களா,இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக