ஜோதிடர் கணித்த கணிப்பு பேசாலைதாஸ்
ஒரு ஜோதிடர் நடந்து போகும் வழியில் போது ஒரு மண்டை ஓடு கிடந்தது....
அந்த மண்டை ஓடை தூக்கிட்டு வந்து வீட்டில் வந்து ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தார்..
இந்த மண்டை ஓடு யாராயிருக்கும்??? ஆனா பெண்ணா இந்த மண்டை ஓட்டுக்காரர் எப்படி இறந்தார்????
என்று தான் கற்ற ஜோதிடத்தை வைத்து ஆராய்ச்சி செய்து பார்க்க.... அவர் மனைவி தூங்கியவுடன் ஒரு அறைக்குள்ளே போய் கதைவையஅடைத்துக் கொண்டு அந்த மண்டை ஓட்டை கையில் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார்... அவர் ஆராய்ச்சி செய்து பார்க்கையில் இந்த மண்டை ஓடு ஒரு ஆணாகத்தான் இருக்கணும் இவர் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கிறதே... எப்படி இறந்தார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்..
தினமும் இதே வழக்கமாகக் கொண்டிருந்தார் ஜோதிடர் மனைவி உறங்கியவுடன் பக்கத்து அறையில் கதவை அடைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார்..
தன் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது தினமும் நான் தூங்கி உடன் இவர் எதற்காக அறையில் போய் கதவை அடைக்க வேண்டும் என்று...
ஒரு நாள் மனைவி தூங்குவது போல் நடித்தார் அவர் எழுந்து கதவை அடைத்துக் கொண்டார் மனைவி ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் போது ஜோதிடர் மண்டை ஓட்டை பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார் ...
மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரிடம் என் கணவன் தினமும் இரவில் ஒரு மண்டை ஓடு வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்ல....
அதற்கு அந்தப் பக்கத்து வீட்டுக்காரி என்ன சொன்னால் தெரியுமா??? உன்னுடைய கணவனுக்கு முதல் கல்யாணம் முடிந்திருக்கும் அவள் செத்துப் போய் இருப்பாள் அவள் ஞாபகமா தான் அந்த மண்டை ஓடு வைத்து திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல
அப்படியா சங்கதி என்று வீட்டுக்கு வந்தவள் அந்த மண்டை போட்டு எடுத்து உரலில் போட்டு உலக்கையால் குத்திக்கொண்டு இருக்கும் போது தன் கணவன் வந்து விட்டான்..
எனக்குத் தெரியாம இன்னொருத்திய கல்யாணம் முடிச்சு இறந்த பிறகு அவள் மண்டை ஓடு வச்சி தினம் பாத்துக்கிட்டு இருக்கியா இனிமே யாரை வைத்து பார்க்கிறேன் என்று சொல்லி கொண்டே
உலக்கையால் குத்த..
அப்போது அந்த ஜோதிடர் நான் கணித்த கணிப்பு சரியாக இருக்கிறது இவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கு என்று நினைத்தேன் அனுபவித்து விட்டான்....
இப்போது சந்தோஷம் என்றார் ஜோதிடர்.....
கதையின் நீதி:: நம்ம வீட்டு பிரச்சனைகள் நம்ம வீட்டுக்குள்ளே முடித்துக் கொள்ள வேண்டும் வெளியே செல்லக்கூடாது
நமக்குத் தெரிந்ததை விட பக்கத்து வீட்டுக்காரர்களுக் தான் அதிகம் தெரியும் போல... நமது குடும்பத்தை பற்றி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக