மனித ரூபம்
வேனுவுக்கு எட்டு வயது, சின்னஞ்சிறு சிறுமி, அவளுக்கு இரண்டு தம்பிகள், அவளுடைய அப்பா ஒரு விபத்தில் இறந்து இரண்டு வருடமாகின்றது, வேனுவின் அம்மா மிகவும் கஸ்டப்பட்டு, கூலி வேலை செய்து, தன் குடும்பத்தை நடத்தி வந்தாள், தான் எப்படியாவது நன்றாக படித்து, வேலை எடுத்து, தன் அம்மாவுக்கு உதவவேண்டும் என்ற இலட்சியம் வேனுவின் பிஞ்சு மனசின் ஆசை. வேனு தன் கடைசித்தம்பி மீது அளவிலாபாசம் வைத்திருந்தாள். வேனுவின் கடைசித்தம்பி மில்லன், கொஞ்ச நாட்களாக திறாத நெஞ்சு வலியால் அவதிப்பட்டான், ஒரு நாள்; தன் தாய்மாமன் வீட்டுக்கு வந்து, தன் அம்மாவோடு மெல்லிய குரலில் அழுது கொண்டே பேசுவதை, பக்கத்து அறையில் இருந்து கேட்கிறாள்.
அவளுடைய இரண்டு வயது தம்பி உடல் நிலை மோசமாக இருப்பதால், மருத்துவ செலவு அதிகரிக்கிறது.
அதிக செலவுள்ள ஒரு அறுவை சிகிச்சை அவள் தம்பிக்க தேவைப்படுகிறது. அந்த அளவு கடன் கொடுக்க யாரும் இல்லை.
அழும் தன் தாய்க்கு, மாமா ஆறுதல் கூறியது அவள் மனதில் பதிந்தது.
ஏதேனும் அதிசயம் நடந்தால்தான்,
இவன் குணமாவான் என்று மாமா கூறினார். இதைக்கேட்ட
வேனு, தன்னுடைய உண்டியலை சத்தமில்லாமல் உடைத்தாள்.
1௦௦ ரூபாவும் 50 சதமும் இருந்தன.
மெல்ல பின்பக்க கதவு வழியாக தெருவிற்கு வந்து, அங்கே இருந்த புகழ் பெற்ற மருந்து கடைக்கு சென்றாள்.
என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது. என் மாமா, தம்பியை பிழைக்க வைக்க அதிசயம் வேண்டும் என்றார். அதிசயம் என்ன விலை ? இன்னும் பணம் வேண்டும் என்றாலும் முயற்சிக்கிறேன் என்றாள்.
மருந்துக்கடைக்காரர் வருத்தத்துடன், இங்கே அதிசயம் கிடைக்காது என்று கூறினார்.
நன்றாக உடையணிந்த, அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர், எவ்வளவு பணம் வைத்து இருக்கிறாய்
என்று வேனுவிடம் கேட்டார்.
௧௦௦ ருபாவும், 50 சதமும் என்று வேனு கூறினாள்.
அவர் புன்னகையோடு அதிசயம் சரியான விலை நீ வைத்திருக்கும் பணம். பணத்தை கொடு என்று வாங்கி கொண்டு,
வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டு அவளூடன் அவள் அம்மாவை சந்தித்தார். சிறுவனையும் பரிசோதித்தார்.
அவர்தான் புகழ் பெற்ற Neuro surgeon Dr.Carlton.
பிறகு நடந்தது ஆச்சரியம். ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது.
டாக்டர் சிகிச்சைக்கு எந்த கட்டணமும் வாங்காமல், வேனுவை அணைத்து கொண்டு கூறினார். 100 ரூபா 50 சதத்தில் அதிசயம் வாங்கி தம்பியை குணப்படுத்தி விட்டாய். Good girl.
வீட்டிற்கு குணமான தம்பியை அழைத்து வந்த பிறகு, தாய் "இது அதிசயம். என்ன செலவானது என்று தெரியவில்லை என்றார்.
வேனு தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்
சொல்லி கொண்டாள். அதிசயங்கள் எந்த மனித ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
எப்பொழுதும் மனம் தளராதீர்கள் என தென்னங்கீற்றூ மெதுவாக சொன்னது. யாவும் கற்பனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக