Followers

Saturday 7 May 2022

போதையில் மயங்கிய இயேசு

  பேசாலை போதையில் மயங்கிய இயேசு!    சிறுகதை  பேசாலைதாஸ்

     


கல்வாரிமலை, உச்சவெயில், இயேசு சிலுவையில் தொங்குகின்றார் தொய்வோடு. தாகமாயிருக்கின்றது என்கின்றார் அவர். உடனே யூத இராணுவ வீரன் கடற்காளானில் ஹேரோயின் போதையை கலந்து இயேசுவுக்கு கொடுக்கின்றான்.அதை மணந்துபார்த்த இயேசு போதையில் மயங்குகின்றார். (இனி தொடர்வது பேசாலைதாசின் கற்பனைகள்) அவருக்கு வலி எதுவும் தெரியவில்லை. புதிய உத்வேகம் அவருக்கு பிறக்கின்றது. சிலுவையில் தொங்கிய அவர், சிலுவையில் அறையப்பட்ட தனது கரங்களை தனது பலம் கொண்டவரை அதை புடுங்கி எறிகின்றார். கால்களில் அறையப்பட்ட ஆணிகளையும் புடுங்கிக்கொண்டு சிலுவையில் இருந்து இறங்குகின்றார். யூத இராணுவம் திகைத்து நிற்கின்றது.


சீட்டுப்போட்டு பகிர்வதற்காக வைக்கப்பட்டிருந்த தனது அங்கியை பறித்து எடுத்து அணிந்து கொள்கின்றார். அதுவரையும் அவர் பிறந்த மேனியாகவே இருந்தார். யூதனிடம் இருந்த சவுக்கையும் பறித்து எடுத்து இடுப்பிலே சொறுகிக்கொள்கின்றார். அவரோடு அறையப்பட்ட கள்வர்களின் ஆணிகளையும் புடுங்கி தனது சட்டைப்பைக்குள் திணிக்கின்றார். அந்த இரு கள்வர்களையும் சிலுவையில் இருந்து விடுவித்த இயேசு,  பேசாலை கிராமத்தை நோக்கி நடகின்றார்.  இயேசுவுக்கு தெரியும் போதைவஸ்துக்கள் எல்லாம் பேசாலை ஊடாக இலங்கைக்கு கடத்தப்படுகின்றதுஎன்றும், . தனக்கு ஊட்டப்பட்ட ,ஐஸ் அல்லது சுவர்முட்டி அல்லது ஹேரோயின் ஏதோ ஒன்று பேசாலை ஊடாகவே கடத்தப்படது என்பதை அவர் தனது ஞானத்தால் உணர்ந்திருக்கின்றார் போல.


இயேசுவுக்கு பேசாலை மக்கள் மீது கடும் கோபம்! தனது தாயின் பெயரில் பிரமாண்டமான ஆலையம் கட்டி, அதற்கு வெற்றி அன்னை என்று பெயர் இட்டு, வெறித்தனமாக போதை வஸ்து கடத்தும் பேசாலை மக்கள் மீது அவருக்கு கடும் கோபம்! நெருப்பினால் சுட்டெரித்த சோதோம் கொமராவைப்போல பேசாலை கிராமத்தை அழிக்கும் அளவுக்கு அவருக்குள் கோபம் பொங்கி எழுகின்றது, அன்னையின் தயவால் அந்த கோபத்தை அவர் அடக்கிக்கொள்கின்றார். தனது அன்னை பேசாலை மக்களுக்கு வாரிக்கொடுத்த செல்வங்களை எல்லாம் மறந்து, பணத்தின் மீது ஆசை கொண்டு, சமூகத்தை சீரழிக்கும் போதைவஸ்து கடத்தும் பேசாலை மக்களை நினைத்து கண்ணீர் வடிக்கின்றார். நன்றி கெட்ட பேசாலை மக்கள். இரு கடலும் மீன்வளத்தால் பெருகி, பேசாலை கிராமாம் பணச்சாலையாக, பக்தியில் திளைத்திருந்த பொற்காலம், சம்மாட்டிகள் என்று பெரும் பெரும் தன்வந்தர்கள் பெருமையோடு பக்தியோடு வாழ்ந்த பேசாலை கிரமாம், இப்போது போதைவஸ்து சாலையாகிவிட்டது,,,,, இயேசுவின் எண்ணங்கள் கோபங்களாக அவர் நெஞ்சில் பொங்கி பிரவாகிக்கின்றது.


பேசாலை கிராமத்துக்கு சென்ற இயேசு, பங்குகுருவை கேட்கின்றார், நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள் என கோபமாக கேட்கின்றார். அதற்கு அவர், இயேசுவே நான் பிரசங்கத்தில் பலமுறை சொல்லிவிட்டேன். இவர்கள் திருந்துகின்ற மக்கள் இல்லை, பெரிய பெரியவீடு கட்டவேண்டும், தங்கத்தில் ஐம்பது பவுணில் தாலி கட்டவேண்டும், பத்து இலட்சத்தில் சேலைகட்டவேண்டும் என்று பேசாலை பென்களே துணிச்சலாக கடத்தல் செய்கின்றார்கள், இதற்கு பேசாலை ஆண்கள், பள்ளி சிறுவர்கள் எல்லோரும் துணைபோகின்றார்கள். காவல் அதாவது சென்றி பார்க்கும் சிறுவர்களுக்கு பத்தாயிரமும் கொஞ்ச போதைவஸ்துவும் கொடுக்கின்றார்கள். வன்னியில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த பாமர மக்களையும் தமது கடத்தல் தொழிலுக்கு உடந்தை ஆக்கி பின்னர் போதை வஸ்துகளுக்கு ஆளாக்குகின்றார்கள் ஆண்டவரே என அழாக்குறையாக பங்குக்குரு சொல்கின்றார்.


கோபம் கொண்ட இயேசு பங்குச்சபை என்ன புடுங்குகின்றார்கள் என கோபத்தோடு கேட்கின்றார்கள், அதற்கு குருவானவர் இயேசுவே மன்னியும், பங்குச்சபையில் இருப்பவர்களும் இதை மெளனமாக இருக்கின்றார்கள்  அவர்கள் முயன்றால் பேசாலையில் சில வாலிபர்களுக்கு ஊதியம் கொடுத்து கடற்கரைகளைக்காவல் செய்யலாம், இராணுவம் கடற்படை கால்துறை, அரச அதிபர், நீதிபதிகள் இவர்களிடம் கலந்தாலோசித்து, கடத்துபவர்களிடம் தண்டம் அறவிட்டு அதை காவல்காக்கும் வாலிபர்களுக்கு சம்பளமாக கொடுக்கலாம், பங்கு சபையில் இருப்பவர்களுக்கோ சமூக விழிப்புணர்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லே ஆண்டவரே என பங்கு குரு ஓலமிடுகின்றார். அவர்கள் தமது அதிகாரத்தை பாவித்து பேசாலை மக்களை கட்டுப்படுத்தலாம் அவர்கள் அதை செய்கின்றார்கள் இல்லையே என கவலைப்படுகின்றார் பங்குக்குரு.


அப்படியா என்று தலையாட்டிய இயேசு, பேசாலை பொலிஸ் என்ன செய்கின்றது விசாரிக்கின்றார் இயேசு . பாவம் பொலிஸ் என்ன செய்யும் அவர்க்ளுக்கே அவர்கள் வாங்குகின்ற சம்பளம் போதாது, சீரழிவது தமிழர்கள்தானே என அரசாங்கம் கண்டு கொள்வதில்லை, நான் என்ன செய்ய ஆண்டவரே என்று மீண்டும் கதறுகின்றார் பங்குத்தந்தை. இயேசுவே நீர் என்ன செய்ய நினைக்கின்றீரோ அதை சீக்கிரம் செய்யும் ஆன்டவரே! இந்த பேசாலை கிராமத்தை அழித்துவிடும் என்கின்றார் பங்குத்தந்தை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துபோன இயேசு சீக்கிரம் நான் மீண்டும் வருவேன் அதற்குள் பேசாலை மக்கள் திருந்தாவிட்டால் சுனாமி வடிவில் அழிப்பேன் இது சத்தியம் என்று இயேசு பங்கு குருவுக்கு சொல்லிவிட்டு, இதை நீர் பிரசங்கத்தில் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்,,,,,,,,,,.போதைவஸ்துவின் மயக்கம் தெளிந்த இயேசு சிலுவையில் தொங்கிய படியே பிதாவே பேசாலை மக்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களி மன்னித்து இவர்களுக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று சொல்லி தனது ஆவியை ஒப்படைக்கின்றார் இயேசு,,,,,,,யாவும் கற்பனையே    அன்புடன் பேசாலைதாஸ்


No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...