பின் தொடர்பவர்கள்

சனி, 24 ஜனவரி, 2026

கன்னத்தில் என்னடி காயம்

 கன்னத்தில் என்னடி காயம் பேசாலைதாஸ்

அக்பருக்கு பீர்பால் மேல் மரியாதை இருந்தாலும் அவருக்கும் மனிதர்களுக்கே உரிய பொறாமை இருநதது. (அரசர் என்றாலும் மனிதர்தானே)

எப்படி அனைவரையும்விட புத்திசாலியாக இருக்கிறார். இவரை எப்படி மட்டம் தட்டுவது என்று யோசித்தார்.

நாம்தான் அரசர் ஆயிற்றே அந்த அதிகாரத்தில் அனைவர் முன்னிலையிலும் அடிப்போம் என்னசெய்துவிடுவார் என்று நினைக்கிறார்.

அதன்படி அரசவை கூடியதும் பீர்பாலை அழைக்கிறார். ஒன்றும் பேசாமல் அனைவர் முன்னிலுயிலும் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

அனைவருக்கும் படு அதிர்ச்சி. பீர்பால் அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று.

பீர்பால் ஒரு கணம் மட்டுமே யோசித்தார் மறுவினாடி பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.

அவருக்கு பொறிகலங்கியது.

பீர்பால் சொன்னார். ம் நீங்கள் உடனே மற்றவர் கன்னத்தில் அறையுங்கள் பின் அவர் மற்றவர் கன்னத்தில் அறையவேண்டும் இது அரசர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு .

உடனே அந்த அமைச்சர் மற்ற அமைச்சரை அறைய இப்படியே நாடு முழுவதும் ஒருவர்மாற்றி ஒருவர் அடித்துகொள்கின்றனர்.

கடைசியாக அரண்மனை அந்தப்புரத்தில் விளையாட்டு நுழைகிறது ராணியின் தோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர் அறைந்துகடைசியாக ராணி அடிவாங்குகிறார்.

ராணி அதிர்ச்சியடைந்து விபரம் கேட்க தோழிகள் இது அரசர் ஆரம்பித்த விளையாட்டாம் இதை நீங்கள் அவரிடமே முடித்துவிடுங்கள் என்கிறார்கள்.

இரவு மன்னர் ஆசையாய் ராணியை(!!) பார்க்கவர ராணி அக்பர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

மன்னர் பொறிகலங்கி நிற்க ராணி சொன்னாராம்.

இது பீர்பாலிடம் நீங்கள் காலையில் ஆரம்பித்தவிளையாட்டம் நான் அதை உங்களிடமே முடித்துவிட்டேன். என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கன்னத்தில் என்னடி காயம்

 கன்னத்தில் என்னடி காயம்   பேசாலைதாஸ் அக்பருக்கு பீர்பால் மேல் மரியாதை இருந்தாலும் அவருக்கும் மனிதர்களுக்கே உரிய பொறாமை இருநதது. (அரசர் என்ற...