Followers

Thursday 9 December 2021

தர்ம கணக்கு பேசாலைதாஸ்

தர்ம கணக்கு  பேசாலைதாஸ்

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு 

வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தாங்க. இரவு நேரம்.மழை.அப்போ அங்கே

மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

வந்தவர், நானும் இரவு இங்கே தங்கலாமா”ன்னு கேட்டார்.அதற்கென்ன

தாராளமாய் தங்குங்கள்னாங்க.

🌹சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னாரு வந்தவர்.

முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார்.

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது"ன்னாரு.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது"ன்னாரு.

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்.

மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி

சொல்கிறேன்னு சொன்னாரு. அதாவது நீங்கள் உங்கள் ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்போது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும். நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம்ன்னாரு.இது சரியான

யோசனைன்னு அப்படியே செய்தாங்க.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுட்டு உறங்கினாங்க. பொழுது விடிந்தது. மழையும் நின்னது. மூன்றாவதாய்  வந்தவர்                                       கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றின்னு சொல்லி எட்டு தங்க  நாணயங்களைக் கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்துக்கொள்ளுங்கள்ன்னு சொல்லிட்டு விடைபெற்றார்.

மூன்று ரொட்டிகளை

கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம்ன்னாரு. மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகளான் னு வாதிட்டார்.  மூன்று ரொட்டிகள்

கொடுத்தவர் ஒப்புக் கொள்ளலை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளலை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத் தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம்ன் னாரு.

🌹சுமூகமான முடிவு ஏ ற்படாததால் விஷயம் அரசனின் சபைக்கு போனது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான் இரவு முழுக்க இதே சிந்தனை

🌹வெகுநேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் முடிவு கிடைத்தது. அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்டவர், மன்னா இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்ன் னாரு.

🌹அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள் அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தர்மம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம்ன்னாரு.

🌹ஆக கடவுளின் கணக்கு எவ்வளவு துல்லியமா இருந்தது. பார்த்திங்களா

🌹🙏இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பதுதான் அவன் கணக்கு. ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தர்ம கணக்கு🙏🌹

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...