Followers

Thursday 14 October 2021

யாரும் இருக்கும் இடத்தி இருந்து கொன்டால்,,,,,,?

யாரும் இருக்கும் இடத்தி இருந்து கொன்டால்,,,,,,? பேசாலைதாஸ் 


ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், "மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார். 

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம்,  இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான். 

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique   கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு,  தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...

தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே,  பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...

" உன்னுடைய  மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."

" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...