Followers

Thursday 2 September 2021

 முல்லா நஸ்ருதீன்

ஒரு கிணற்றைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்.
உள்ளே எட்டிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
அது இரவு நேரம். இருந்தாலும் எட்டிப் பார்த்தார் கிணற்றுக்குள். கிணற்று நீரில் நிலா தெரிந்தது.
"ஐயோ, அந்த நிலாவைக் காப்பாற்ற வேண்டுமே" என்ற எண்ணம் தோன்றியது அவருக்கு.!
காப்பாற்றா விட்டால் சந்திரிகை தேய்வது எப்படி? தேயாவிட்டால் ரம்ஜான் நோன்பு எப்படி இருக்க முடியும்?
அவர் உடனே ஒரு கயிற்றை தேடிப்பிடித்துக் கிணற்றுக்குள் வீசினார். "பிடித்துக்கொள் பலமாக" என்று கத்தினார். கயிறு, எங்கோ, கீழே மாட்டிக் கொண்டது. பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தார் அவர். முடியவில்லை. கடைசியில் கயிறு கழன்றது.
தடாலென மல்லாக்க தரையில் சாய்ந்தார் முல்லா. மூச்சு வாங்கியது. மேலே பார்த்தார். வானத்தில் நிலவின் பவனி! அவருக்கு ஒரே மகிழ்ச்சி.
"நான் வந்து காப்பாற்றியதால் உயிர் பிழைத்தாய் இல்லையா?" என்றார் அவர் மகிழ்ச்சியுடன்.
மனிதன் தன் ஆணவத்திற்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்-ஆனால் இவன் இல்லாமலேயே எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவன் ஒன்றுமே இல்லை. ஆனால், தானே எல்லாமாக நினைத்துக் கொள்கிறான்.
--ஓஷோ--
, ’அறியாமை என்பது எது வரை? Matrix mm’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
395
26 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...