பின் தொடர்பவர்கள்

வியாழன், 8 ஏப்ரல், 2021

0553 விழிப்பாயிருங்கள் என்று இயேசு சொன்னார்.

 விழிப்பாயிருங்கள் என்று இயேசு சொன்னார். பேசாலைதாஸ்

விழிப்பாயிருங்கள் பாவத்தில் விழுந்துவிடாதபடி செபம் செய்யு ங்கள் என்று இயேசு அடிக்கடி போதித்து வந்தார், சிலருக்கு விழிப்புணர்வு என்றால் என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை, எனக்கு தெரிந்த வரை விளக்க முயற்ச்சிக்கி ன்றேன்.

ஒரு கத்தோலிக்க குருவானவரும், ஒரு குடிகார ஆட்டோ டிரைவரும் 

இறந்த பிறகு சொர்க்கத்தின் வாசலில் அதன் தீரவுகோலோடு நிற்கும் 

புனித இராயப்பரை சந்தித்தனர் ...

கத்தோலிக்க குருவானவர், அவரிடம் நான் ஒரு கிராமத்தில் 

மத போதனை செய்து பல பேர்களை கிருஸ்தவ 

மதத்திற்கு மாற்றி இருக்கிறேன் .. 

என்னை சொர்க்கத்துக்குள் 

அனுமதிக்க  வேண்டும் என்றார் ..

அடுத்து அந்த குடிகார டக்ஸி டிரைவர் 

நானும் மக்களை 

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு 

அழைத்து சென்று சேவை செய்து இருக்கிறேன் .. 

அதனால் என்னையும் சொர்க்கத்துக்குள் அனுமதிக்க 

வேண்டும் என்றான் ...

இதைக்கேட்ட இராயப்பர், போதகரே நீங்கள் 

இங்கேயே 

சிறிது காலம் காத்திருங்கள் .. 

டக்ஸி டிரைவரே தயவு செய்து 

உள்ளே 

செல்லுங்கள் என்றார் ..

இதைக் கேட்டு திடுக்கிட்ட குருவானவர்,

இராயப்பரைப்  பார்த்து  

கொஞ்சம் பொறுங்கள் ..

நான் ஒவ்வொரு ஞாயிறும் ஆர்வமாக, தூய தமிழில்

மக்களுக்கு அழகாக

மத போதனை செய்து அவர்கள் மனங்களை 

மாற்றி இருக்கிறேன் ...

ஆனால் இந்த டிரைவரோ குடிகாரன் ..

அவன் எப்படி சொர்க்கத்துக்கு 

தகுதியானவன் என்று வாதிட்டார்.

அதற்கு புனித இராயப்பார்

இது உண்மைதான் ..

நீங்கள் மத போதனை செய்யும் போது 

அத்தனை பேரும் 

தூங்கிக் கொண்டு இருந்தார்கள் ..

ஆனால் அந்த குடிகாரன் டக்ஸி ஓட்டும் பொழுது 

அத்தனை பேரும் 

மிக்க விழிப்பு நிலையிலேயே இருந்தார்கள் . எப்படியாவது விபத்தில்லாமல் வீடு போகவேண்டும் என அப்போது எல்லோருமே உண்மையில் தீவிர பிரார்த்தனை 

நிலையில் இருந்தார்கள் ..

இப்பொழுது புரிகிறதா

என்று கேட்டார் ..புனித இராயப்பர். அன்பர்களே இப்போது விழிப்பாக இருந்து செபிப்பது உங்களுக்கு புரிகின்றதா?  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...