பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

0555 கரடி நகம்

கரடி நகம் பேசாலைதாஸ்

                                   கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள். கணவர் பிரியமாக இரு க்க ஏதாவது தாயத்து செய்துத் தாரு ங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும், “ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார்.

சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள். ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள். 

அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச் சுற்றி வருவான். இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார். 

அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி சொன்னாள்.

திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும் பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம் பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு. இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

கதையின் நீதி :-

கணவனை அதிகம் நேசியுங்கள்...

அ"ன்பானவன் எதற்கும்

ஆ"சைப் படாதவன், துன்பத்திலும்

இ"ன்பம் தருபவன், மனதில் 

ஈ" கோ இல்லாதவன் எப்போதும்,

உ"ண்மையானவன் என்றும்,

ஊ" ரில் வாழ்ந்தாலும் 

எ" ப்போதும் யாரையும்

ஏ" மாற்றத் தெரியாதவன்,

ஐ" ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,

ஒ" வ்வொரு உறவையும் மதிப்பவன்,

ஓ" டிச் சென்று உதவி செய்பவன்,

ஔ" வையார் போல் தன்னுடைய ஆசைகளைத் துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்...

எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள் கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்... இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை ... ஒரு நண்பர் பதிவில் இருந்து

 அன்புடன் பேசாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...