பின் தொடர்பவர்கள்

வியாழன், 8 ஏப்ரல், 2021

0552 பெண்புத்தி

 பெண் புத்தி பேசாலைதாஸ்


ஒருநாள் நான் என் நண்பனை சந்திப்பதற்காக அவன் வீட்டுக்கு சென்றேன். தாஸ் அவர்தான் என் நண்பன், அவரின்  மனைவி அழுது கொண்டிருந்தாள்.

நான் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தபோது அவள் இன்னும் பலமாக அழுதாள். 

        "என்ன விஷயம்?" என்று  நான் கேட்டேன். 

         "இப்போது விஷயங்கள் கட்டுக்கடங்காமல்  போய்விட்டன. 

உங்கள் நண்பர் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்.

அதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. 

 ஏனெனில்  பல சமயங்களில்  அவரது கோட்டின் மீது நீளமான ரோமங்களை நான் பார்த்திருக்கிறேன்.

  அவை அவருடையவை அல்ல. 

அவர் தலை வழுக்கை. அவருக்கு நீளமான முடி இல்லை,  அந்த நீளமான முடியும் நரை விழுந்த முடி, எனவே இவருக்கு கிழவிகள் மீது தொடர்பு இருக்கின்றது

 " என்று  அழுதாள் அவள்.

          "இன்று  எதையாவது நீங்கள் பார்த்தீர்களா?" என்றேன்  நான்.

          "இன்று  ஒன்றுமே இல்லை -- அதனால்தான்  நான் இன்னும் சோகமாக அழுது கொண்டிருக்கிறேன்.

  ஏனெனில்  இன்று நான் மிக நுணுக்கமாகச் சோதனை செய்ததில் ஒரு முடி கூட அகப்படவில்லை. 

 அப்படியென்றால்,,,,

  அவர் தலை வழுக்கையான பெண்கள் கூடப் பழகத் தொடங்கிவிட்டார், என்றுதானே

என்று அர்த்தம். இது ரொம்ப ஜாஸ்தி. இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

 கூந்தல்  உள்ள பெண்களோடு தொடர்பு கொள்ளட்டும்   சரி , ஆனால்  தலை வழுக்கையான  பெண்களுமா........."ஏந்தான் இந்த மனுசன் நினைப்பு இப்படி போகுதோ,,,,கூவி அழத்தொடங்கிவிட்டாள் என் நண்பனின் மனைவி மதி. பெண் புத்தி பின் புத்தி என்று சொன்னது சரியாத்தான் போயிற்று என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன். அன்புடன் பேசாலதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...