பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

0026 மனம் ஒரு குரங்கு

 மனம் ஒரு குரங்கு பேசாலைதாஸ்

அன்பர்களே மனித மனம் விசித்தி ரமானது, அது நேர்கோட்டில் அல்லது எப்போதும் நேர் மறையாக சிந்திப்ப தில்லை. எப்பொழுதும் முரண்பட்டு க்கொண்டே இருக்கும். இதை நான் சொல்லவில்லை,  நவீன உளவிய லின் தந்தை சிக்மன்ட் பிரைட் கூறி யது,  நாம் எதை மறக்கவேண்டும் என்று போராடுகின்றோமோ? நமது தீர்மானங்களுக்கு மாறாக மனித மனம் முரண்பட்டுக்கொண்டு, அந்த எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கைவைக்கும், அதனால் தான் மனதை அடக்க முடியாத பலவீனம் கொண்டவர்கள், ஒரு செயலுக்கு சீக்கி ரம் அடிமையாகி அதில் இருந்து விடுபடமுடியாது, வாழ்வை சீரழிக்கின்றா ர்கள். தமிழ் கவிஞனின் இப்படிப்பாடினான், "கண்ணிலே உறுதி இல்லை, காதலுக்கும் நீதி இல்லை, ஒரு நாள் இருந்த மனம், மறு நாள் இருப்பதி ல்லை, குடிசையில் ஒரு மனது, கோபுரத்தில் ஒரு மனது,கூடாத சேர்க்கை யெல்லாம் கூடினால் பல மனது"

.,,,ஆமாம் மனம் ஒரு குரங்குதான்! அதை அழகாக நிரூபிக்கின்றது இந்த கதை!

ஒரு அழகிய கிராமத்தின் அருகே ஒரு காடு ஒன்று உள்ளது. அக் காட்டினுள் ஒரு அழகிய குடிசை ஒன்றை ஒரு தவ முனிவர் வடிவமைத்து அங்கு தவம் செய்து வந்தார். அச் சமயத்தில் ஒரு சிஷ்யன் குருவிற்க்கு உதவி செய்வ தாக குறி அவரிடம் சேர்ந்தான். ஒரு சில நாட்க்களின் பின்பு குருவிற்க்கு புரிந்தது இவன் எதோ ஒரு தேவைக்காகத்தான் வந்திருக்கிறான். அதை மனதில் வைத்து கொண்டு கேட்க்கத் தயங்குகிறான் என்று. 

முனிவர் ஒரு நாள் அச் சிஷ்யனை கூப்பிட்டு கேட்டார் உனக்கு என்ன வேணும் என்று? அப்பொழுது ஆரம்பிக்கிறான் சிஷ்யன் தான் வந்த கார ணத்தை சொல்ல : முனிவரே உங்களிடம் நிறைய சக்தி இருக்கிறது எம் மால் முடியாத பலவற்றை நீங்கள் நிகழ்த்துகிறீர்கள். இந்த சக்தி எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது என்று வினவி முடித்தான். முனிவர் சொன்னார் இதற்க்கு தவம் செய்ய வேண்டு என்று. அப்பொழுது சிஷ்யன் எனக்கு அதை சொல்லி தர முடியுமா? எனக் கேட்டான். முனிவர் சிஷ்யனிடம் தவம் செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை சொன்னார். மந்திரம் சொல்லி முடித்த பின் முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார். 

நீ இந்த மந்தி ரத்தை உச்சரிக்கும் போது குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது என்று. அச் சிஷ்யனும் சரி என்று கூறி விட்டு அச்சிரமத்தை விட்டு வெளியே வந்தான் அப்பொழுது அவனுக்கு முன்னால் குரங்குகள் மட்டுமே கண்ணில் தென்பட்டது. சரி விட்டுக்கு போவோம் என்று அங்கே போனா லும் குரங்கு தான் அவனுக்கு தென்பட்டது. 

பின்னர் குளிக்க சென்ற போது சாப்பிட சென்றபோது எல்லாம் அவனுக்கு குரங்கு மட்டுமே தென்பட்டது. சரி மந்திரத்தை சொல்லுவம் என்று சுவாமி அறையினுள் சென்றால் அங்கேயும் இரண்டு குரங்குகள் பூஜை செய்து கொண்டிருந்தன. அவனுக்கு ஒரே குழப்பம் அத்தோடு அவன் சொல்ல வேண்டிய மந்திரத்தையும் மறந்து விட்டான். அடுத்தநாள் அதிகாலையில் முனிவரின் அச்சிரமத்திற்கு சென்றான். முனிவரை அழைத்து முனிவரே எனக்கு எந்த சக்த்தியும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னை இந்தக் குரங்குகளிடம் இருந்து காப்பாறினால் போது என்று கூறினான். முனிவர் அவனை அதிலிருந்து காப்பாற்றி அனுப்பினார். 

மனிதனின் மனமானது எதை நினைக்க வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் எந் நேரமும் நினைத்துக் கொண்டிருக்கும். அன்புடன் பேசாலைதாஸ்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...