பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

சங்க இலக்கியங்கள்

 சங்க இலக்கியங்கள் பேசாலைதாஸ்

எட்டுத்தொகை நூல்கள்

1.நற்றிணை (Narrinai)

2.குறுந்தொகை (Kurunthokai)

3.ஐங்குறுநூறு (Ainkurunooru)

4.கலித்தொகை (Kalithokai)

5.அகநானூறு (Agananooru)

1.பதிற்றுப்பத்து (Pathirruppattu)

2.புறநானூறு (Purananooru)

1.பரிபாடல் (Paripadal)

1.நற்றிணை (Narrinai)

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத் தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றி ருந்தது போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

2.குறுந்தொகை (Kurunthokai)

குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந் நூல் 400 பாடல்களைக் கொண்டது. 205 புலவர்க ளால் பாடப்பெற்றது. இந் நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்கினியரும் உரை எழுதியுள்ளார்கள்.

3.ஐங்குறுநூறு (Ainkurunooru)

ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல் களைக் கொண்டது இந் நூல். இந் நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொ ன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந் நூல் ஐங்குறு நூறு என்னும் பெயர் பெற்றது. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்.

4.கலித்தொகை (Kalithokai)

150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவ ராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார். இந் நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.

5.அகநானூறு (Agananooru)

அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 146. இந்நூலைத் தொகுக்குமாறு செய்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். இந் நூலின் முதல் 90 பாடலுக்கு பழைய உரை உள்ளது. முழுமையாக நாவலர் வேங்கடசாமி நாட்டரும், கரந்தை கவியரசு வெங்கடாசலம் பிள்ளையும் உரை வரைந்துள்ளனர்.

6.பதிற்றுப்பத்து (Pathirruppattu)

பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவி ல்லை.

7.புறநானூறு (Purananooru)

புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார்.

8.பரிபாடல் (Paripadal)

பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...