பின் தொடர்பவர்கள்

புதன், 25 மார்ச், 2020

0161முத்தம் என்றும், மோகம் என்றும் ,,,,,,,

முத்தம் என்றும், மோகம் என்றும் ,,,,,,,  


நிலா ஒளி அவள் முகத்தில் பளிச்சிட,
கல்லூரி காதல் பருவத்தில்
முதல் முதலாக ஒரு முத்தம்
இறுக அனைத்து எச்சில் பட ,,,,,,
சீ என்ன இது அசிங்கம் என்றாள். 


 கழுத்தில் தாலி கட்டிய இறுமாப்பில்
இறுக அணைத்து மீண்டும் ஒரு முத்தம்
என்ன அவசரம் பொறுக்கக்கூடாதோ என்றாள் 

மூன்று குழந்தைகள் பெற்றபின்பும்
மெதுவாய் பின்னால் சென்று,
செல்லமாய் திமிரும் மார்புகளை
அணைத்தபடி முத்தம் கொடுத்தேன்
குழந்தைகள் கண்டால் என்று
 முழி விரித்து அதட்டினாள் என்னை அன்று,, 


 ஆண்டுகள் அறுபது கடந்தபின்பும்
எதோ ஒரு மயக்கத்தில் அவள்
சுருக்குக்கன்னங்கள் சிலிர்த்திட
முத்தம் கொடுத்தேன்
 வயசு அறுபது ஆயிறுச்சு இன்னும்
அதே நெனப்புதா என்றால் அவள்...

 இறுதியில் சொந்தங்கள் ஒன்றாய் திரண்டு
 குளிப்பாட்டி குங்குமப்பொடிட்டு,
திருமண பட்டில், கண் மூடிக் கிடந்தவளை
 கண்ணீரோடு முத்தம் கொடுத்தேன்
 அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேற வேலையே இல்லை என்பதுபோல்... 

 💝💝 ..என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

 இறுதிவரை நேசிப்போம் அவள் 
 அவள் வழி துணையாக வந்தவள் அல்ல
 அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்
 (இணையத்தில் வந்த கவிதை கரு, என் கவிதை நடையில்,,,,)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...