பின் தொடர்பவர்கள்

புதன், 5 பிப்ரவரி, 2020

0021 பேதங்கள் எண்ணதில் தான்!

சித்திர கிண்ணத்தில் பேதமில்லை, உன் சிந்தனையில் தான் பேதமடா?  பேசாலைதாஸ்


                              சிரிக்கின்ற பெண்களை பார்க்கும் சிலருக்கு அழைப்பதைப் போல் ஒரு சித்தத்துடிப்பு, இது பலரிடம் இருக்கும் பலவீனம் அது எவ்வளவு மடமை என்பதை விளக்கு வதே இந்த கதை, ஒரு நாட்டு மன்னன் தன் அர ண்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்ப ட்டான்.
                                          அப்பெண்ணோ "மன்னா!நட னம் ஆடுவது எங்கள் குலதொழில். நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள். ஆத லால் இது வேண்டாமே" என்றாள். மன்னவனோ  "ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்கதான் வேண்டும். வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகி றேன்" என்றான்.
                                                        அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை. மன்னனிடம் கடைசி யில் ஒப்புக் கொண்டாள். அப்பெண் "சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாங்கள் விருந்து வைக்கிறேன். அமுதுண்டு பிறகு சல்லா பிக்கலாம்" என்றாள். மன்னனும் சென்றான்.
அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள்.
                                                  மன்னன் எனக்கு சாப்பிட பொறுமை இல்லை. நீயே ஊட்டி விடு என்று கூறி னான். அப்பெண்ணும் ஊட்டி விட்டாள். மன்னன் சுவைத்தான். விருத்து முடிந்தது. மன்னனிடம் கேட்டாள்... "மன்னா...!!! 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவை எப்படி இருந்தது? "நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்" என்றான் மன்னன்.

                                                           "மன்னா நாங்களும் அப்படிதான். பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றாள். மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கினார்.
"தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என் றான். இது கதை அல்ல உண்மை நம் வீட்டிலும் பெண்கள் உண்டு. பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்களாக நினைத்து #சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள்.

நட்பு_வளர்க்கும்_பிற_பெண்கள்_மனதை காயப்படுத்தாதீர்கள்!   அன்புடன் பேசாலைதாஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...