பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 6 மே, 2018

0542 ஏமாறச்சொன்னது நானா? என் மீது கோபம் தானா? பேசாலைதாஸ்

ஏமாறச்சொன்னது நானா? என் மீது கோபம் தானா? பேசாலைதாஸ்
பொய்யர்களும், புளுகர்களுமாய் அரசியல்வாதிகள் மாறி, பொது மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லாத, பொல்லாத கதைகளை அவிழ்த்து விடுவார்கள். தங்களைப்போல மற்றவர்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். உன்னைப் போல உன் அயலவனை நேசி என்ற இயேசுவின் பொன்மொழி களை, தமது சுயநலனுக்காக, மக்களுக்கு எடுத்து ஓதுவார்கள், தம்மை தேசபற்றாளன், தாய்மொழி பற்றாளன் இப்படியாக ஏமாற்று கதைகள் சொல்லி திரிவார்கள், இவர்களின் நடவைக்கையை அப்படியே படம் பிடிக்கின்றது இந்த கதை!

                                                         ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திரா ட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்..வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர் க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண் ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது ..அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது..என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது..உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது..உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது..உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டி னவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது..

                                                                       இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெறிவார்” என்றது..”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி  உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது..உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டு விட்டான்..ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது..ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை.
இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...