பின் தொடர்பவர்கள்

சனி, 5 மே, 2018

0541 பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா? பேசாலைதாஸ்

பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா? பேசாலைதாஸ்
பேசுவதால் கதைப்பதால் நமக்கு மகி ழ்ச்சி ஏற்படுவது உண்மைதான், ஆனால் யாரோடு பேசுவது என்ன பேசுவது என்ப தில்தான் மகிழ்ச்சி தங்கியுள்ளது! மனை விமாரோடு மனம் திறந்து பேசுவது மகிழ் வதை தரும் என்று சுவாமி ஒருவார் ஒரு கருத்தரங்கில் ஒரு கரும்பலகையில் எழு தினார்.  ஒருவர் இர்கசியமாக அதற்கு கீழே எழுதினார், யாருடைய‌ மனைவி யோடு பேசுவது இன்பம் தரும்? என தமா ஸாக எழுதினான். யாரோடு கதைத்தாலும் பரவாயில்லை, அன்பொழுக, இன்பமாக கதைத்தால் பிரச்சனையே இல்லை, மகிழ் ச்சிதான் நிரம்பி வழியும், ஆனால் சில ரோடு கதைத்தால், இருக்கின்ற இன்பங் களை எல்லாம் தொலைத்துவிடுவோம், சிலரோடு கதைக்காமல் இருப்பதே சந்தோசமாக இருப்பதற்கான ஒரே வழி! இதை விளக்க ஒரு கதை இங்கே!

                                                                    ஒருமுறை ஒரு  ஒருவழிப்போக்கன், ஒரு காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தார்...அவர் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்தார்...சும்மா தெரிந்து கொள்வதற்க்காக... அதனிடம் ஒரு கேள்வி கேட்டார்...எப்போதுமே எதையும் அறிந்து கொள்வதில், அந்த வழிப் போக்கன் ஆர்வமுடையவர்..."ஐயா, எது, உங்களை இங்கே  கொண்டு வந்தது?" என்றார்...உடனே அந்த மண்டை ஓடு..."பேச்சுதான் என்னை இங்கே கொண்டு வந்தது, ஐயா" என்றதும்  அந்த வழிப்போக்கன் பிர மித்துவிட்டார்...மண்டை ஓடு பேசியதை, அவரால் நம்பவே முடியவி ல்லை...ஆனால், அவர் அதை காதால் கேட்டாரே, எனவே அரசவைக்கு ஓடினார்...

                                          "நான் ஒரு அதிசயத்தைப் பார்த்தேன். ஒரு மண்டை ஓடு பேசுகிறது ! நம்ம ஊருக்கு பக்கத்தில் இருக்கும்  காட்டில்தான் அது கிடக்கிறது" என்றார்...அரசனாலும் அதை நம்ப முடியவில்லை. ஆனா லும் அவனுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. சபையே மொத்தமாகக் கிளம் பியது...அவர்கள் காட்டுக்குள் போனார்கள்...வழிப்போக்கன் அந்த மண்டை ஓட்டின் அருகில் போய், மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்... "ஐயா, எது உங்களை இங்கே கொண்டு வந்தது ஐயா?" ஆனால், மண்டை ஓடு மவுனமாக இருந்தது.  அவர்திரும்ப திரும்ப கேட்டார்...ஆனால், மண்டை ஓடோ...வாயே திறக்கவில்லை.

                                      அரசன் சொன்னான், "எனக்கு முதலிலேயே தெரியும்.  இந்த வழிப்போக்கன்  ஒரு பொய்யன்... ஆனாலும், இது ரொம்ப அதிகம், நீ செய்த குறும்புக்கு தக்க தண்டனையை,  நீ அனுபவித்தாக வேண்டும்...
வழிப்போக்கனின் தலையை வெட்டி, அதை அந்த மண்டை ஓட்டின் பக்கம்  எறும்புகள் தின்னும்படி வீசிவிடுங்கள்...என்று தன் காவலாளிக்கு  கட்டளையிட்டான் மன்னன். அரசன், அவனது பரிவாரங்கள் எல்லோரும் போனபின்... மண்டை ஓடு மறுபடியும்  பேசத்தொடங்கியது...

                                                  "எது உங்களை இங்கே  கொண்டு வந்தது ஐயா?" என்று கேட்டது...அதற்கு  அந்த வழிப்போக்கன்,  "பேச்சுதான் என்னை இங்கே கொண்டு வந்தது ஐயா" என்று பதில் சொன்னார்...பேச்சுதான் இன்றைய துன்ப நிலைக்கு  மனிதர்களை கொண்டு வந்திருக்கிறது... அன்பற்ற கதை, சந்தேகம் நிறைந்த கேள்விகள், பொறாமை கொண்ட பேச்சுக்கள் மனித‌ உறவை கெடுத்துவைத்துள்ளது. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...