பின் தொடர்பவர்கள்

வியாழன், 3 மே, 2018

0540 நம்மை நேசிக்கும் அன்பு , நம்மை வெற்றிபெறச்செய்யும்!

நம்மை நேசிக்கும் அன்பு , நம்மை வெற்றிபெறச்செய்யும்!
                            அலெக்ஸ் ஒரு பள்ளி மாணவனாக இருந்தபோதும், அவ னுக்கு படிப்பை விட, பந்து விளை யாடுவதிலே அதீத ஆர்வம் கொண் டவனாக இருந்தான். ஒவ்வொரு வார இறுதி விடுமுறை நாட்களில், பாடசாலை மைதானத்தில் நடக் கும் உதைபந்தாட பயிற்சிக்காக‌,  கண்பார்வையற்ற தனது தந்தை யுடன் செல்வான். பயிற்ச்சி நடக் கும் போதேல்லாம், கமான் அலக்ஸ்! கமான் அலக்ஸ்! என்று, அவனது அப்பா சத்தமிட்டு உட்சாகப் படுத்துவார். அவர் எப்பொழுதும் கறுத்த கண்ணாடி அணிந்து, இப்படி மைதானத்தில் சத்தமிட்டு தனது மகனை உட்சாகப்படுத்துவது, பலருக்கு ஒரு வினோதமாகவே இருந்தது. 

                                                                                           அலக்ஸ் பயிற்ச்சி எடுத்தாளும் அவனுக்கு போட்டியில் பங்குபற்றும் வாய்ப்புகள் வழங்கபடவில்லை.  ஒவ்வொரு தடவையும், பயிற்ச்சியாளரிடம் சென்று, தன்னையும் உதைப ந்தாட்ட போட்டியில், இணைத்துக்கொள்ளும் படி கேட்பான், பயிற்ச்சியா ளரோ, போதிய அளவு, விளையாட்டு வீரர்கள் இருப்பதாகவும், பயிற்சி இன்னும் போதாது என்று, சொல்லி, அலக்ஸின் கோரிக்கையை நிரா கரித்தவண்ணம் இருந்தார், ஒவ்வொரு தடவையும் அவனும், அவனது தந்தையும் சோகத்துடன், வீடு திரும்புவார்கள். இரண்டு வார காலமாக, அலக்ஸ் மைதானத்துக்கு வரவில்லை.   

                                                                                            ஒரு நாள், பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது,  அலக்ஸின் பாட சாலை படுதோல்வியை சந்த்தித்துக்கொண்டு, இருந்தது, அந்த தருணத் தில் அலக்ஸ் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி மன்றாட்டமாய் கேட்டான். எப்படியோ தோற்கப்போவது உறுதி என்று தெரிந்த பயிற்ச்சியாளர், இன்னமும் 15 மிமிடம் இருக்கும் போது அலக்ஸிற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். அப்போது தனது பாடசாலை பூச்சியத்திலும், எதிரணி பாடசாலை மூன்று கோல்களுடன், முன்னணியில் இருந்தது. 

                                                                             அலக்ஸ் மிக திறமையாக விளையாடி  னான். மிகதிறமையாக விளையாடி, களநிலவரத்தை தலை கீழாக மாற் றினான். நான்கு கோல்களை தான் மட்டுமே அடித்து சாதனைபுரிந்து வெற்றியை பெற்றுக்கொடுத்தான் அலக்ஸ்!  போட்டி முடிவிலே செய்தி யாளர்கள் அவனிடம் எப்படி இவ்வளவு ஆக்ரோசத்தோடு விளையாடி, மிக குறுகிய நேரத்தில் நான்கு கோல்களை பெற்று வெற்றி பெறமுடிந் தது என்று கேட்டபோது, எல்லாவாற்றிற்கும் என் அப்பாவின் அன்பே காரனம், என் அப்பாவிற்கு கண்கள் தெரியாது, அவர் இப்போது இறந்து விட்டார். என் அப்பா விண்ணில் இருந்து என் விளையாட்டை இரசிப்பார் அவரை மகிழ்ச்சிபடுத்தவேண்டும் என்ற உந்துதலே என் வெற்றிக்கு காரனம் என்று சொல்லி அழுதான். மைதானத்தில் இருந்த எல்லோரின் கண்களும் குளமாகின. நமது வெற்றியின் உந்துதலுக்கு, நம்மை நேசி க்கும் அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை இதைவிட எப்படி அழகாக சொல்லமுடியும்? அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...