பின் தொடர்பவர்கள்

புதன், 2 மே, 2018

0539 காகித ரோஜாக்கள்!

காகித ரோஜாக்கள்!
                                               
                    புஸ்பவனம் ஒரு பூக்கடை வைத்திருந்தார். அந்த பூக்கடையில் செயற்கை ரோஜாகள் ஒரு புறமும், இயற்கை ரோஜாக்கள் மறு பக்கமாக வைக்கப்பட்டிருந்தன. செயற்கை ரோஜாக்கள் தூசி படாவண்ணம் ஒரு கண்ணடி பெட்டிக்குள் வைத்து பூட்ட ப்படிருந்தன ஆனால் இய‌ற்கை ரோஜா க்கள் வெளியே வைக்கப்பட்டு குளிர்ந்த நீர் தெளித்து ஜில் என்று சிலிர்த்து நிற்கும், கூடவே அதன் நறுமணம் கடை முழுவதையும் நிரப்பும். என்னதான் இயற்க ரோஜாக்கள், ஜில் என்று பூத்து நின்றாலும், வாசனை பரப்பினாலும் அதன் ஆயுள்காலம் குறைந்தது மூன்று நாட்கள் மட்டும் என்பதில் இயற்கை ரோஜாக்களுக்கு கவலை இருந்தாலும், இருக்கின்ற கொஞ்ச காலம், ஜில்லென்று இருந்து நறுமணம் பரப்பி வாழ்கின்றோம் என்பதில் ஒரு பெருமிதம் அந்த பூக்களுக்கு இருக்கத்தான் செய்தது.  செயற்கை ரோஜா க்களுக்கு தாம் நீண்ட காலம் வாழ்கின்றோம் என்பதில், தலைக்கணம் கொண்டிருந்தன. ஒருமுறை ஒரு கல்யாணவீட்டு அலங்காரத்திற்காக ஒருவர் வந்து இயறகை பூக்களையும், செயற்கை பூக்களை வாடகைக்கும் வாங்கிச்சென்றார். வாடகைக்கு வாங்கப்பட்ட செயற்கை ரோஜாக்கள் வெறுமனே சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் இயற் கையான ரோஜாக்கள் திருமணத்தம்பதிகளின் கழுத்திலும், மணமக ளின் தலையிலும் ஒய்யாரமாக இருந்து மகிழ்ந்தன. இதனைக்கண்ட காகித ரோஜாக்களுக்கு ஒரு உண்மை தெரியவந்தது. வாழ்வது கொஞ்ச காலமாக இருந்தாலும், நல்ல மணம் பரப்பி, சில்லென்று மகிழ்ந்துவா ழும் மலர்களைத்தான் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை காகித ரோஜாக்கள் உணரத்தொடங்கின,,, எவ்வளவு காலம் வாழ்ந்தது என்பது கேள்வி இல்லை, எப்படி நன்மை செய்து, தர்மம் செய்து, மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல மணம் பரப்பி மற்றவர்களை மகிழ்வித்து, தாமும் மகிழ்வாக வாழ்வது என்பது வெற்றிகரமான வாழ்க்கையே! அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...