பின் தொடர்பவர்கள்

புதன், 2 மே, 2018

0538 அன்பு என்ற ரோஜா மலர்!

 அன்பு என்ற ரோஜா மலர்!
                               மதம் என்ற ஒரு சமூக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, மனிதர்கள் எல்லோரும் அன்போடு வாழ்வதற்காக, எல்லா மதங்களின் அடிப்படையே மனிதனுக்கும், அவனைப்படை த்த படைப்பாளிக்கும் இடையில் உள்ள அன்பு தான்! ஒவ்வொரு மதங்களும் தோற்றுவிக்கப்ப ட்டதற்கு அடிப்படை காரனம் அன்பை விதை க்கவும் வளர்க்கவுமே! அன்பு என்ற மலரை வளர்த்தெடுக்க சமயங்களுக்கு சில சம்பிரதா யங்கள் சடங்குகள் தேவைப்பட்டது, ஆனால் இந்த சாதி, சம்பிரதாயங்கள், சட‌ங்குகள் மட் டுமே வளர்தெடுக்கபாடதே தவிர அன்பு என்ற ரோஜா மலரை எல்லோருமே மறந்தே விட்டா ர்கள்!
                            ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந் தார், அவர் ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந் தார்..அந்த செடி அழகாக பூத்து குலுங்கியது. அந்த செடி வளர்ந்து வரும் வேளையில்
அந்த பக்கமாக வரும் ஆடு, மாடு கோழி போன் றவை அந்த செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம் செய்து கொன்டி ருந்தன. இதை கண்ட அந்த பெரியவர் அந்த செடியை பாதுகாக்க எண்ணி அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில முள் வேலிகளை போட்டு வைத்தார். ரோஜா செடியை சுற்றிலும் முள் வேலிகள் இருந்ததால் அந்த செடி பாதுகாப்பாக வளர்ந்து வந்தது இப்போது ஆடு, மாடு, கோழிகளால் அந்த செடிக்கு ஆபத்து இல்லை சிறிது காலம் சென்றது அந்த பெரியவர் இறந்து விட்டார்

                                   பிறகு அவருடைய மகன் வந்தான், அந்த செடியை பார்த் தான் தன் தந்தை ஆசையாக வளர்த்த செடி  ஆயிற்றே என்று அவனும் ஆசையாக தன்னீர் ஊற்றி வளர்த்து வந்தான். சிறிது காலத்தில் அவனும் இறந்து விட்டான். பிறகு அவனுடைய மகன் வந்து இது, என் தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி நானும் வளர்க்க வேண்டும் என்று அவனும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான். இப்படியே ஒவ்வொரு தலைமு றையும் அந்த செடியை வளர்த்து வருகிறோம். ஆனால் உண்மையில் நடந்தது அந்த ரோஜா செடி பெரியவர் காலத்திலேயே பட்டுப்போய் விட்டது

                              இப்போது அவர்கள் செடி என்று வளர்ப்பதெல்லாம் அதை சுற்றி இருந்த முள் வேலிகளையே. இதே போலத்தான் பெரியவர்கள் மதம் என்று ஒன்று உருவாக்கியது மனிதனை செழுமைப்படுத்த வேண் டும் என்ற நோக்கத்திற்கு தான். அந்த மதம் அழியாமல் இருக்க முள் வேலி போன்று மதத்திற்கு சில சம்பிரதாய சடங்குகளை விதித்தனர்
ஆதியில் மதத்தை கடைபிடித்த மனிதன். இப்போது ஒவ்வொரு மதத் திலும் இருக்கும் சம்பிரதாய சடங்குகளையே மதம் என்று எண்ணி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டான். அன்பு என்ற‌ ரோஜா செடி வளர்ப்ப தற்கு பதில் முள் வேலிக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கின்றான் மனிதன். அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...