பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

0537 பாவம் பாம்பு என்ன செய்யும் ?

பாவம் பாம்பு என்ன செய்யும் ?
 பெண்களின் சுபாவம் எல்லாவற்றி ற்கும் ஆசைப்படுவது. நகை, பட்டு ப்புடவை, அழகுசாதனம், ஆடம்ப ரம், பணம் இப்படி எல்லாவற்றி ற்கும் ஆசைப்படுவது பெண்களின் இயல்பு, பெண் எல்லாவற்றிலும் ஆசைப்படுவாள், அந்த பெண் மீது, ஆண் ஆசைப்ப டுவான். இதுதான் இயற்கை. 


ஏவாளுக்கும் இது தான் நடந்தது, அழகான, கண்ணுக்கு நேர்த்தி யான ஆப்பிள் பழத்தைக் கண்டாள். ஆசைப்பட்டாள் ஆனால் அது சபி க்கப்பட்ட மரத்தின் கனியாகிற்றே எப்படி அதை சுவைப்பது? ஏவாளின் மனதில் ஒரு போராட்டம். அந்த நேரம் பார்த்து மரத்தில் ஒரு அப்பாவிப் பாம்பு, பழம் கொத்தவரும் குருவியை கவ்விப்பிடிக்க பாம்பும் பசியாக இருந்திருக்கலாம். ஏவாளின் மனதில் எழுந்த போராட்டத்தில், சாத்தான் அவள் மனதோடு பேசுகின்றான். வேதம் ஓதுகின்றான். 

                                                                                இந்த பழத்தை நீ புசித்தால் சாகவே மாட்டாய், மாறாக நன்மை தீமையை பகுத்தறியும் அறிவை பெறுவாய், கடவுளாக மாறுவாய் என்று ஏவாளின் மனதோடு சாத்தான் பேசுகின் றான்.  ஆசைக்கு பாத்தி கட்டியா கிவிட்டது. பழத்தை பறித்தாள் தானும் கடித்தாள், தன் ஆசைக்கணவன் ஆதமுக்கும் கொடுத்தாள். மனைவிக்கு மயங்கியவன் என்ன செய்வான், எந்த கேள்வியும் இல்லை, தலையாட் டியபடியே அவனும் கடித்தான்.

                                                                          இதை கடவுள் கண்டார், ஏன் கடித்தாய் என்று கேட்டார்? பய‌ந்துபோன ஆதாம் பழியை ஏவாள் மீது போட்டான். நீர் எனக்கு தந்த என் விலா எழும்பு  ஏவாள், கடிக்க சொன்னாள் கடித் தேன் என்றான். கடவுள் ஏவாளிடம் ஏன் கடித்தாய் என்று கேட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல், பழியை பாவம் பாம்பின் மீது போட்டாள். பாம்பு சொன்னது நான் கடித்தேன் என்கின்றாள். 

                                                                        நல்லவேளை கடவுள் பாம்பிடம் கேட்கவி ல்லை, கேட்டிருந்தால் பழியை பாம்பு கடவுள் மீது போட்டிருக்கும். பாம்பு பேசுமா? என்ன பைத்தியகாரத்தனம்? சாத்தான், ஏவாளின் மனதோடு பேசியதை ஏவாள் பாம்பு பேசியாதாக சொல்வது சுத்த பைத்தியகா ரத்தனம்! 

                                                                     இன்றும் சாத்தான் மனித மனங்களோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றான். அழகிய பெண்களை பார்க்கும் போது, உல்லாச மாளி கையை பார்க்கும் போது, ஆடம்பரமான கார் களை பார்க்கும் போது, அதிகா ரத்தில் உலாவி வரும் மந்திரிமார்களை பார்க்கும் போது, பணக்காரர்களை பார்க்கும் போது, ஏக்கத்தை மனதில் விதைக்கின்றான். நாமும் அந்த ஏக்க த்தில் பழியாகிப்போகின்றோம். அந்த பழியை நாம் வேறு ஒருவர் மீது போட்டு தப்பிக்கப் பார்க்கின் றோம். 

                                                                   தன் தவறை உணர்ந்து, அதற்காக மன்னி ப்பு கேட்பதி ல்லை. ஏவாளும் அதைத்தான் செய்தான், ஆதாமும் அதைத் தான் செய்தான். அவன் சந்ததிகள் நாமும் அதைத்தான் செய்கின்றோம். இடையில் பாவம் பாம்பு, கடவுள் கூட கொஞ்சம் யோசித்திருக்க வேண் டும், கோபத்தில அவர் கூட, பாம்பை சபிக்கின்றார். பாவம் பாம்பு என்ன செய்யும்?   சிந்தித்து மனம் நொந்தவன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...