பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

0536 (இ)திணிப்புகள் தெவிட்டலாம்!

 (இ)திணிப்புகள் தெவிட்டலாம்!

                                                                 
 நமது பிள்ளைச்செல்வங்கள், டாக்டராவோ இஞ்சினியரா கவோ வரவேண்டும் என்ப தில் எல்லோருக்கும் ஆசை தான். சிலர் தமது பிள்ளை களை அவ்வாறு வரவேண் டும் என்று  திணிக்கின்றா ர்கள், ஆனால் அது நிறைவே றுவதில்லை, சில சந்தர்ப்ப ங்களில் பிள்ளைகள் தாமா கவே ஆர்வம் கொண்டு, அதனை தெரிவு செய்து வெற்றி பெறுகின்றார்கள். ஒவ்வொரு தொழில்களைப்பற்றிய சிறப்புகள் முக்கியம் பற்றி பெற்றோராகிய நாம் சொன்னால் பிள்ளைகள் தாமாகவே தேடல்களுக்கு உள்ளாகி வெற்றி காண்பார்கள். நான் எனது பிள்ளைகள் மூவரையும் டாக்டர்களாக வரவேண்டும் என்று அறிவுரை சொன்னேன். என் மகன் மட்டும், அதனை மறுத்தான் தான் ஒரு ஆட்டோ மொபைல் நுட்பவியலாளனாக வரவேண்டும் என்று சொல்லி அதையே படித்துக்கொண்டு இருக்கின்றான். ட்ரைவிங்க் அவனது இலட்சியமாகிவிட்டது. மற்ற இரண்டு பெண்களுமே டாக்டராக ஆர்வமாக படிக்கின்றார்கள், அதில் அவர்களுக்கு பூரண திருப்தி, எனவே எதனையும் நாம் திணிக்கவே கூடாது. இனிப்பும்  திணிப்பும் தெவிட்டலாம்!தலை சிறந்த மருத்துவன் ஆக வேண்டும் என்றால் அந்த ஆர்வம் அவன் உள்ளேயிருந்து எழ வேண்டும்.

                                                                           ஒரு பொறியியலில் ஆர்வம் கொண்ட ஒரு மாணவனை அவனுடைய தந்தை கட்டாயப் படுத்தி மருத்துவத்துக்கு படிக்க வைத்தார். எப்படியோ அவன் மருத்துவனாகி விட்டான். ஒரு நாள் வயிற்று வலி என்று செரு ப்பு தைப்பவன் ஒருவன் வந்தான்.  மருத்துவனால் சுயமாக அது என்ன வலி என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னு டைய பாட குறிப்புகளில் தேடிப் பார்த்தான் எதுவும் கிடைக்க வில்லை.
                                                         பிறகு நோயாளியிடம் சொன்னான் எனக்கு தெரிந்த வரை உன்னுடைய நோய்க்கு மருந்தில்லை. நீ இன்னும் சில நாட்கள் தான் உயிரோடு இருக்க முடியும் என் றான். செருப்பு தைப்பவன் வருத்தத்துடன் போய் விட்டான்.
பல நாட்கள் கழித்து அவனை ஒரு சந்தையில் வைத்து அவனை உயிருடன் பார்த்தான் மருத்துவன். ஆச்சரியத்துடன் நீ எப்படி உயிருடன் இருக்கிறாய் என்று கேட்டான். அவன் சொன்னான் எப்படியும் நான் சாகப் போகிறேன் என்பதால் எனக்கு பிடித்த உருளைக் கிழங்கு போண்டா பத்து சாப்பிட் டேன். பிறகு வயிற்று வலி சரியாகி விட்டது என்றான். மருத் துவன் இதை தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டான்.
பிறகு ஒரு நாள் துணி தைப்பவன் ஒருவன் வயிறு வலியோடு வந்தான். மருத்துவன் சொன்னான் உனக்குரிய மருந்து எது வும் இல்லை. நீ பத்து உருளை கிழங்கு போண்டா சாப்பிடு சரியாகி விடும் என்றான்.
                                                          அவன் சென்ற மறு நாள் செய்தி வந்தது அவன் இறந்து விட்டதாக.மருத்துவன் யோசித்து தன்னுடைய டைரியில் குறிப்பு எழுதினான் இப்படி.... வயிற்று வலி வந்தால் பத்து உருளை கிழங்கு போண்டா செருப்பு தைப்பவனை குணமாக்கும், துணி தைப்பவனை கொன்று விடும். 
 அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...