பின் தொடர்பவர்கள்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

0509 தனக்கு வந்தால் மட்டும் தெரிகின்றது!

தனக்கு வந்தால் மட்டும் தெரிகின்றது! குறுங்கதை பேசாலைதாஸ்

அந்த காரியாலயம் வழமைக்கு மாறாக பரபரப்பாக இருந்தது, அன்றையதினம், எப்போதும் ஒரு மணித்தியாலம் தாமதமாக வரும் மனேஜர் கூட நேரகாலத்தோடு அவர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டார். அன்றைய தினம் வருவாய் அமலாக்க பிரிவும் மேலிடத்து அதிகாரியும் வருவதாக செய்திகள் கசிந்தபடியால்தான், அந்த காரியாலயம் பரபரபாக் இருந்தது. எல்லா வேலையாட்களும் வந்துவிடார்களா? என்று ஆபிஸ் பியோனை அழைத்து கேட்டார் மனேஜர் தாஸ், " சார் எல்லோரும் வந்துட்டாங்க ஆனா குமார் சார் மட்டும் இன்னும் வரவில்லை சார்" என்று சொன்ன பியோன், கூடவே இன்னும் அதிகமாக " சார்,   குமார் சார் எப்பவும் ஆபிஸிற்கு தாமதமாகவே வருவார் சார்" என்று மேலதிக பற்றவைத்தான், தனக்கு குமார் மீதுள்ள கோபத்துக்கு, பழிவாங்கியதாக ஒரு மனமகிழ்ச்சி அவனுக்குள். சரியாக ஒரு மணியாகிவிட்டது இன்னமும் குமார் வரவேயில்லை. மனேஜர் தாஸிற்கு கடுங்கோபம் தலைக்கேறி இருந்தது, குமார் செய்யவேண்டிய வேலைகளை அவர், இன்னொரு குமஸ்தாமுலம் அதை செய்துவிட்டார் மனேஜர், வரட்டும் குமார், ஒரு கை பார்க்கின்றேன் என மனதுக்குள் கருவிக்கொண்டார் மனேஜர் தாஸ். 

சொல்லிவைத்தாற் போல அமலாக பிரிவும், மேலிடமும் காரியாலயத்துக்கு வந்துவிட்டு போய்விட்டனர். ஒரு பிரச்சனையும் இல்லைதான், ஆனாலும் குமார் இன்னமும் வரவில்லை.  சரியாக எட்டு மணிக்கு வரவேண்டிய குமார், காலை பத்துமணிக்கே ஆபிஸ் வந்தார். வந்ததும் வராததுமாக, குமாரை அழைத்தார் மனேஜர் தாஸ். "என்ன குமார் உன் மனசில நீ என்ன நினைச்சிருக்கே! மனேஜர் என்றா, இன்ன்டைக்கு என்ன நடக்கும் என்று நான் நேற்றே சொல்லியிருந்தேன், அப்படி இருந்தும் நீ என் சொல்லை மதிக்கல" என்று ஆத்திரத்தில் வார்த்தகளை கொட்டினார் மனஜேர் தாஸ். " இல்லங்க சார் வருகிர வழியில், ஒரு ஸ்கூல் பையன் வீதி விபத்தில மாட்டிக்கொண்டான், நான் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, வந்திருக்கின்றேன், சார் என்னை மன்னிச்சுடுங்கோ" மன்றாடினான் குமார், இருந்தும் பயனில்லை. " அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்ப நான் உனக்கு சஸ்பென்ஸ் ஓடர் தருகின்றேன் இன்றில் இருந்து ஒரு வாரம், நீ வேலைக்கு வரவேண்டாம் என்று ஒரே அடியாக சொல்லிவிட்டார் மனேஜர் தாஸ். என்ன செய்வது குமாரும் அந்த சன்ஸ்பென்ஸ் ஓடரை வாங்கிக்கொண்டு வெளியேறினான், அந்த ஆபிஸ் பியோனை தவிர மற்ற ஆபிஸ் வேலையாட்கள் எல்லோரும் குமார் மீது அனுதாபபட்டார்கள்.

குமார் ஆபிஸை விட்டு போன, சற்று நேரத்தில் மனேஜர் தாஸ்வீட்டில் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு கதறியது, "என்னங்கா உடனே நீங்க வீட்ட வாங்க, நம்ம பையன் வீதியில், காரில் மோதிவிட்டானாம், அறிவே அற்ற நிலையில், யாரோ ஒரு புண்ணியவான், நம்ம பையனை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால, நம்ம பையன் புழைச்சுக்கிடான், உடனே வாங்கா" மனேஜர் தாஸின் மனைவி நிலாவின் அழுகை அது! " நிலா நீ சொன்ன சொல்லுறே, எங்கே இது நடந்தது?" பதட்டத்துடன் தாஸ் கேட்க, "அதுதாங்க ஏ.கே நகர் வீதியில் வீதியை கடக்கும் போது நடந்ததாம்" நிலா சொல்லி முடிக்க, மனேஜர் தாஸின் நெஞ்சம், குற்ற உணர்வில் துவண்டது, அட நம்ம குமார், நம்ம பிள்ளை என்று தெரியாம, அவனே என் மகனை காப்பாற்றியுள்ளானே! தாஸ் தனது காரில் பறந்தார். ஆஸ்பத்திரிக்கு அல்ல,,, குமாரின் வீடு நோக்கி,,, அவன் காலில் வீழ்ந்து மன்னிப்பு கோர,,, மீண்டும் குமாரை வேலைக்கு வரச்சொல்ல,,,, அன்புடன் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...