பின் தொடர்பவர்கள்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

0508 மரணம் ஒரு விடையாகிறது!

மரணம் ஒரு விடையாகிறது! பேசாலைதாஸ்

         
 ஏன் என்ற கேள்வி, இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை. நான் என்ற எண்ணம், கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை! கேள்விகளோடு தான், மனித வாழ்க்கை நகர்கின்றது, விடையேதும் தெரியாமல்,,, ஒருவேளை ஒரு கேள்விக்கு, விடை தெரிந்துவிட்டால், அந்த விடையே இன்னொரு கேள்வியாக மாறி, மீண்டும் தொடர்கின்றது. வாழ்க்கையே ஒரு கேள்வி தான், அதற்கு யாருமே பதில் தரமுடியாது, அதுபோல, மரணம் ஒரு விடையாகிறது. அதில் யாருமே கேள்வி கேட்க முடியாது! வாழ்க்கையே இல்லாத மேடை அதில் எழுதாத நாடகம்! அதில் எல்லோரும் நடிக்கின்றோம், எல்லோரும் நடிகர்களே, வேசம் போட்டுக்கொ ண்டோம் அவ்வளவுதான். ஓசோ ஒரு கதை சொன்னார், நடு வீதியில் ஒருவன் நின்று கொண்டு, கைகளை முன்னும் பின்னுமாக, படகு வலிப்பதைப்போல பாவணை செய்து கொண்டிருந்தான், வாகன நெருசல் ஏற்பட்டுவிட்டது. ஒரு கார்ச்சாரதி, அவனிடம் போய், நீ என்ன பைத்தியக்காரன் போல நடந்து கொண்டிருக்கின்றாய், உன்னால் வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டது, அப்பாலே போ என்றான், அதற்கு அவன், நான் பைத்தியக்காரனா? நீ கார் ஓடுகின்றாய், நான் படகு வலிகின்றேன் அவ்வளவுதான் என்றான். படகு வலிக்கின்றாயா, படகை வலிக்கின்றாயா? படகு எங்கே என்றான், படகு இல்லையா,  அப்போ நீந்தவேண்டியதுதான்! வா நீந்தலாம், என்று அவனை அழைத்தவண்ணம், தனது செய்கையை தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தான்! சிலர் அப்படித்தான், ஒரே மாதிரியே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மாற்றம் எதையும் விரும்பாமல் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்! தங்களுக்கு தாங்களே ஒரு வட்டம் போட்டு க்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்! அன்புடன் பேசாலைதாஸ்
https://www.youtube.com/watch?v=V_h7F2opfQc


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...