பின் தொடர்பவர்கள்

புதன், 20 டிசம்பர், 2017

0466 நல்ல போராட்டம்

நல்ல போராட்டம்

அன்பர்களே!  ஓரடி முன்னால் ஈரடி  பின்னால் என்பார்களே! அதாவது ஓர்டி முன்வாங்குவதற்காக இரண்டடி பின்வாங்குவதில் தவறே இல்லை, இது கம்யூனிஸ்டுகளின் போர்த்தந்திரம், இரண்டாம் உலகப்போரின் போது ஹிடலர் வேகமாக மொஸ்கோ நோக்கி முன்னேறிக்கொண்டிரிந்தான்  செம்படைகள் பின்வாங்கிக்கொண்டி ருந்தன. பனி அதிகமாக பெயதொடங்கிய நேரம் பார்த்து செம்படை தாக்கதொடங்கி யது சிம்பரோசா என்ற இந்த போர்த்திட்ட த்தில் ஹிடலர் பெரும் அழிவையும் தோல்வியையும் சந்தித்தான். எப்பொழுதும் தன் முயற்சியை தக்கவைக்க நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதற்கு தவளையின் தன்மை நல்லோதோர் உதாரணம் நம்பிக்கையோடு வாழ்வை தொடங்க இதோ ஒரு கதை,,, தவளை தன் அயல் சுற்றாடலுக்கு ஏற்றபடி தன்னை சுதாகரித்துக்கொள்ளும் என்பதை நிருபிப்பதற்காக ஒருவர் அதனை உயிரோடு ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் இட்டு, தண்னீரை மெதுவாக சூடேற்றினார். தவளையும் அந்த சூட்டுக்கு ஏற்றவிதத்தில் தன் உடலை சுதாகரித்து கொண்டே இருந்தது. தண்ணீர் கொதிக்கும் சூட்டளவுக்கு வந்தபோது தவளையால் தொடர்ந்தும் சுதாகரித்து கொள்ளமுடியவில்லை வெளியே பாய நினைத்தது ஆனால் அதனால் முடியவில்லை. தொடர்ந்தும் தண்ணீரின் சூட்டுக்கு ஏற்றவிதத்தில் தன் உடலை சரி செய்து கொண்டிருந்ததால் தவலை தன் பாயும் சக்தியை அறவே இழந்திருந்தது இறுதியில் தவளை கொதிக்கும் தண்ணீரில் இறந்து போனது.  தவளை இறந்தது தண்ணீரின் அதிக வெப்பம் என்று சிலர் சொல்லக்கூடும் உண்மை நிலவரம் தவளை தான் எப்போது வெளியே பாயவேண்டும் தப்பவேண்டும் என்று சிந்திக்காமல் விட்டு விட்டு, சூழ் நிலையோடு போராடியதன் விளைவே இந்த பரிதாபகரமான இறப்பு. போராடவேண்டும் ஆனால் எப்போது பின்வாங்கி தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு போராடுவதே உண்மையான போராட்டம். முள்ளிவாய்க்கால் நல்ல ஆதாரம் அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...